Jana Nayagan | அன்று எம்ஜிஆர்... என்டிஆர்... இன்று விஜய் - 48 வருடங்களுக்குப் பிறகு ஒரு வரலாற்றுத் தருணம் 'ஜனநாயகன்'!

3 hours ago 6

Last Updated:Jul 23, 2026 2:47 PM IST

VIjay's Jana Nayagan | தமிழ்நாட்டில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சராக இருப்பவர் நடித்த படம் வெளியாகியுள்ளது. இப்படி வெளியான முதலமைச்சர்களின் திரைப்படங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்....

அரசியலில் எம்.ஜி.ஆரை பின்தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு, திரைத்துறையிலும் அவருக்கு அடுத்து என்று வரலாறு சொல்லும் வகையில் தற்செயலாக அமைந்த தருணம்தான் ஜனநாயகன் வெளியீடு. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆர்., தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அந்த தேர்தலுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நடித்த மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய திரைப்படங்களுக்கான தயாரிப்பு பணிகள் பெருமளவு முடிந்திருந்தன.

தேர்தலில் வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். தனிப்பெரும்பான்மை பெற்றாலும் உடனடியாக முதலமைச்சராக பதவியேற்கவில்லை. ஆளுநரிடம் 15 நாட்கள் அவகாசம் பெற்று, மீனவ நண்பன் மற்றும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களில் மீதமிருந்த காட்சிகளை அவசர அவசரமாக முடித்துக் கொடுத்தார். தனது சினிமா பணிகளை முடித்த பின்னர், 1977-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

அதன் பிறகு, ஒன்றரை மாதங்கள் கழித்து, அதாவது, 1977 ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிக்கும்..., என்ற டைட்டில் கார்டுடன் மீனவ நண்பன் படம் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் பெரும் கொண்டாட்டத்துடன் வெளியான மீனவ நண்பன் பெரும் வெற்றியைப் பெற்றது. முதலமைச்சரான பிறகு நடிக்க மாட்டேன் என எம்.ஜி.ஆர். அறிவித்துவிட்ட நிலையில், 1978-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளியானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதேபோல, தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த என்.டி.ராமாராவ் முதலமைச்சரான பின்னரும் அவரது படம் வெளியானது. 1983-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி என்.டி.ராமாராவ் ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், மார்ச் மாதத்தில் சிம்மம் நவ்விந்தி (Simham Navvindi) என்ற படமும், மே மாதத்தில் சந்தா சசானூடு (Chanda Sasanudu) என்ற படமும் வெளியாகின.

என்.டி.ராமாராவ் நடிப்பில் 1981-இலேயே படப்பிடிப்பு முடிந்து சென்சார் பிரச்னைகளால் நிறுத்தப்பட்டிருந்த வீரபிரமேந்திர சுவாமி சரித்திரம்(Srimadvirat Veerabrahmendra Swami Charitra) என்ற படம் 3 ஆண்டுகள் கழித்து, 1984-இல் என்.டி.ராமாராவ் முதலமைச்சராக இருந்தபோது வெளியானது. இந்திய அளவில் முதலமைச்சராக இருந்தபோது அவர்கள் நடித்த படம் வெளியானது எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ராமாராவுக்கு மட்டுமே என்ற வரலாற்று பக்கத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜயின் பெயரும் இணைந்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் படம் வெளியான 48 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜயின் ஜனநாயகன் படம் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் 6 மாதங்கள் தாமதமாகி தற்போது வெளியாகியுள்ளது. இதனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த... என்ற டைட்டில் கார்டுடன் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வெள்ளித் திரைகளை அலங்கரித்துள்ளது.

59 வயதிலும் சீமான் ஃபிட்டாக இருக்க இதுதான் காரணம்... அவரின் ஆச்சர்யமூட்டும் ஒருநாள் டயட் இதோ!

  • 60-களை தொடப்போகும் நேரத்திலும் சீமான் அவர்கள் ஃபிட்டாக இருப்பது எப்படி தெரியுமா?

  • அப்படி அவரின் இந்த டயட்டில் என்னென்ன இருக்கிறது?

  • முழுமையான தகவல்களை இங்கே விரிவாக தெரிஞ்சுக்கோங்க!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article