Last Updated:May 11, 2026 5:54 PM IST
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு வெளியான இப்படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற கர திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 1991-ஆம் ஆண்டு ராமநாதபுரத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு எமோஷனல் ஆக்சன் த்ரில்லர் படமாக இந்த படம் வெளிவந்தது.
தனுஷுடன் இணைந்து மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியானதிலிருந்து இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பு, விக்னேஷ் ராஜாவின் மேக்கிங் ஸ்டைல் மற்றும் ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளன.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் கைப்பற்றியுள்ளது. பொதுவாகத் தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான 4 முதல் 8 வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் என்ற நிலையில், 'கர' திரைப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தின் முதல் பாதியில் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு வெளியான இப்படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், வார நாட்களில் வசூல் சற்று மந்தமாக இருந்தபோதிலும், படத்தின் தரம் மற்றும் நல்ல விமர்சனங்கள் காரணமாகத் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள தொடக்கக் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனுஷின் திரைப்பயணத்தில் இது மற்றொரு முக்கியமான படமாக அமைந்துள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!
5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.
நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.
.png)






English (US) ·