Last Updated:May 12, 2026 9:11 PM IST
Karuppu Review | சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி, சுவாசிகா, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆக தாமதமானது.
இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு ஆந்திராவில் நடைபெற்றது. இதில் சூர்யா, ஆர்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா ‘கருப்பு’ திரைப்படம் எப்படியிருக்கும் என்பது குறித்து பேசினார்.
கருப்பு படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி குறித்து பேசினார். அவர் கூறுகையில், “கருப்பு திரைப்படத்தின் முதல் பாதி உணர்வுப்பூர்வமான நீதிமன்ற நாடகமாக இருக்கும். ஆனால், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தியேட்டர் தருணங்கள், மாஸ் மசாலா காட்சிகள், நகைச்சுவை என முழுமையான பொழுதுபோக்கு நிறைந்திருக்கும். படம் வெளியாவதற்கு முன் எங்களால் உங்களுக்கு அளிக்கக்கூடிய வாக்குறுதி தான் இது” எனக் கூறியுள்ளார்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்கி முடித்துள்ளார். ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension
EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.
ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.
.png)






English (US) ·