Last Updated:Feb 09, 2026 9:10 PM IST
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்துக்கு பிறகு அவர் அஜித்தை வைத்து படம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘எல்ஐகே’.
இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். ரூ.60 பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை. அதன் பிறகு டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை படம் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி காரணமாக ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படவில்லை. ஜனநாயகன் படம் இந்த மாதம் வெளியானால், ‘எல்ஐகே’ மார்ச் மாதம் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
.png)







English (US) ·