Last Updated:Jul 19, 2026 12:49 PM IST
Magalir Urimai Thogai: கடந்த காலத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதிக தொகையுடன் புதிய திட்டம் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டை முன்னிட்டு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை மையமாகக் கொண்ட புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பல்வேறு துறைகளில் புதிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, செயல்படுத்தும் காலக்கெடு மற்றும் பயனாளிகள் தேர்வு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் முக்கியமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் என்ற தகவல் கவனம் பெற்றுள்ளது.
கடந்த காலத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதிக தொகையுடன் புதிய திட்டம் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை பெண்களுக்கான நிதியுதவி திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இதனுடன் ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் சிலிண்டர்கள், மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, ஆண்டுதோறும் இலவச உடல் பரிசோதனை மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், திட்டங்களுக்கான நிதிசுமை மற்றும் தகுதி விதிமுறைகள் தொடர்பான இறுதி முடிவுகள் பட்ஜெட் அறிவிப்பின் போதே தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

53 வயதிலும் செம ஃபிட்... சமுத்திரக்கனிக்கு வழிகாட்டிய சூர்யா, ஆர்யா! எப்படி தெரியுமா?
53 வயதிலும் நடிகர் சமுத்திரக்கனி செம ஃபிட்டாக இருந்து வருகிறார்.
இதற்கு சூர்யாவின் சீக்ரெட்டும், ஆர்யாவின் டிப்ஸுமே அவருக்கு பக்கபலமாக இருக்கிறது
அது என்ன என இங்கே விரிவாக தெரிஞ்சுக்கோங்க!
.png)








English (US) ·