office tips ஆபீஸில் கண்டிப்பாக மற்றவர்களிடம் பகிரக் கூடாத 'டாப் 6' ரகசியங்கள்

12 hours ago 11

அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உரையாடும்போது நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வார்த்தை கூட உங்கள் கேரியரை பாதிக்கலாம்.அலுவலகம் என்பது நட்புக்கான இடமாகத் தெரிந்தாலும், அது ஒரு போட்டி நிறைந்த களம். அங்கு நீங்கள் பகிரக்கூடாத விஷயங்கள் இதோ..

16

Image Credit : Getty

அடுத்த கம்பெனி பிளான் :

நீங்கள் வேறொரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்குச் செல்வதையோ அல்லது இந்த வேலையை விடப் போவதையோ ஒருபோதும் சக ஊழியர்களிடம் சொல்லாதீர்கள். உங்களுக்கு 'ஆஃபர் லெட்டர்' கையில் கிடைக்கும் வரை இது ரகசியமாக இருக்கட்டும். இல்லையெனில், உங்கள் மேனேஜர் காதுக்கு இந்தத் தகவல் எட்டி, தற்போதைய வாய்ப்புகளையும் நீங்கள் இழக்க நேரிடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

26

Image Credit : Getty

மேலதிகாரியைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் :

"பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்", "அவருக்கு ஒண்ணுமே தெரியல" போன்ற கமெண்ட்கள் அங்கே சுவரைத் தாண்டிப் போகும். நீங்கள் ஒருமுறை விளையாட்டாகச் சொன்னது கூட, மேலதிகாரியின் காதுக்குச் செல்லும் போது 'பெரிய குற்றச்சாட்டாக' உருவெடுக்கலாம். இது உங்கள் புரோமோஷனை தாரை வார்த்துவிடும்.

36

சம்பளம் மற்றும் போனஸ் விவரங்கள்

Image Credit : Getty

சம்பளம் மற்றும் போனஸ் விவரங்கள்

ஒரே தகுதியில் இருக்கும் இருவருக்குள்ளும் சம்பள வித்தியாசம் இருக்கலாம். உங்கள் சம்பளம் அதிகம் என்று தெரிந்தால் மற்றவர்களுக்கு பொறாமை வரலாம், குறைவு என்று தெரிந்தால் உங்களுக்கு மரியாதை குறையலாம். சம்பளப் பேச்சு என்பது எப்போதும் உங்களுக்கும் HR-க்கும் இடையே மட்டுமே இருக்க வேண்டும்.

46

உங்கள் மருத்துவப் பதிவுகள் (Medical History)

Image Credit : Getty

உங்கள் மருத்துவப் பதிவுகள் (Medical History)

உங்களுக்கு இருக்கும் தீராத உடல்நலக் கோளாறுகள் அல்லது மன அழுத்தம் சார்ந்த விஷயங்களை அலுவலகத்தில் பகிர வேண்டாம். "இவரால் இந்த வேலையைத் திறம்படச் செய்ய முடியாது" என்ற தவறான பிம்பத்தை இது உருவாக்கிவிடும். லீவு எடுப்பதற்குத் தேவையான காரணத்தை மட்டும் சொன்னால் போதுமானது.

56

Image Credit : Getty

குடும்பச் சண்டைகளும் தனிப்பட்ட புகார்களும் :

நேற்று வீட்டில் கணவர்/மனைவியுடன் நடந்த சண்டையை ஆபீஸில் அமர்ந்து விவாதிக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட சோகங்கள் உங்களை ஒரு 'பலவீனமான நபராக' காட்டக்கூடும். அலுவலகத்தில் எப்போதும் உங்கள் 'ப்ரொபஷனல்' முகத்தை மட்டுமே காட்டுங்கள்.

66

Image Credit : Getty

அரசியல் மற்றும் மதக் கருத்துக்கள் :

அரசியலும் மதமும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள். ஒரு சிறிய விவாதம் கூட மிகப்பெரிய மோதலில் முடியலாம். உங்கள் சக ஊழியரின் நம்பிக்கையை நீங்கள் அறியாமல் புண்படுத்தினால், அது உங்கள் டீம்-வொர்க்கை மொத்தமாகப் பாதிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read Entire Article