Last Updated:October 14, 2025 9:56 PM IST
லோகா திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மலையாள சினிமாவில் வெளிவந்த லோகா திரைப்படம் உலக அளவில் ரூ. 300 கோடி ரூபாய்க்கும் அதிமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சமீபகாலமாக மலையாள படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. முக்கியமாக தமிழ் ரசிகர்கள் தமிழ் படங்களை காட்டிலும் மலையாள திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள லோகா என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக முதன்மை கேரக்டரில் கதநாயகி நடித்துள்ள படத்தை ரசிகர்கள் கொண்டாடியதை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
லோகா திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்த பாகத்தையும் டொமினிக் அருண் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் லோகா படத்தின் டிஜிட்டல் உரிமைய வாங்கியுள்ள ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கப் போவதாக இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 9:56 PM IST