Palani Murugan Temple: பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

14 hours ago 8

Rope car service: உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மின் இழுவை ரயிலில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Min read

Published : Jul 21 2026, 09:06 AM IST

15

Image Credit : our own

உலக புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை விசேஷ நாட்களாகும். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகன் அருளை பெறுகின்றனர். வார இறுதி நாட்கள் வந்து விட்டால் சாமியை தரிசனம் செய்ய சுமார் 5 மணிநேரமாகிவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

25

Image Credit : our own

இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ஆனால் வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

35

Image Credit : our own

ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்லவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

45

Image Credit : our own

இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு 45 நாட்களும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் செப்டம்பர் 14 வரை அதாவது 45 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

55

Image Credit : our own

ஆகையால் பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதை, யானை பாதையை பயன்படுத்தி முருகனை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழனி கோயிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article