Last Updated:May 15, 2026 6:38 PM IST
புதுக்கோட்டையில் நாளை (மே.16) மின் தடை அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை (16.05.2026) பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி பள்ளத்திவயல், பாலன் நகர், கோவில்பட்டி, அபிராமி நகர், இராணுவ காலனி, விஸ்வதாஸ் நகர், நேரு நகர், இறைவன் நகர், ஜெ.ஜெ. நகர், தைலா நகர் மற்றும் மச்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
.png)






English (US) ·