ஈரான் போரில் சீனாவின் உதவி தேவையில்லை: அதிபர் டிரம்ப்

1 hour ago 8

04b0de7e-2eb7-4a1b-b871-2d465d27e524

ஹோர்முஸ் நீரிணையின் ஒமன் பகுதியில் காணப்படும் கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஈரானுடன் நடக்கும்போரில் சீனாவின் உதவிக்கு தேவையிருக்காது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (மே 12) தெரிவித்தார்.

அவரின் கருத்துக்கு இடையே நிரந்தர அமைதி மத்திய கிழக்கில் ஏற்படும் என்ற நம்பிக்கை துவண்டு வரும் வேளையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் அதன் பிடியை வலுப்படுத்தி வருகிறது.

சீனாவுடன் உச்சநிலை மாநாட்டை நடத்த அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், அதிபர் ஸி ஜின்பிங்கின் உதவியைக் கொண்டு மத்திய கிழக்கு பூசலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று தாம் எண்ணவில்லை என்றார்.

உலகின் மொத்த எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒருபங்கு அந்த நீரிணை வழியாகவே செல்லவேண்டியுள்ளது. நடந்து வரும் போரால் அங்கு பல வர்த்தகக் கப்பல்கள் சிக்கி நிற்பது பெரும் பொருளியல் விளைவுகளை பல நாடுகளில் ஏற்படுத்திவிட்டது.

“ஈரானைப் பொருத்தவரை, யாரின் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை. அமைதியாகவோ, வேறு வழிகளிலோ அந்தப் போரை நாம் வெல்வோம்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறினார்.

ஏறத்தாழ ஒரு மாதமாக நடப்பில் உள்ள சண்டை நிறுத்தத்தில் முழு அமைதியை எட்டுவதில் இரு தரப்பும் எவ்வித முன்னேற்றமும் அடைவில்லை.

அதே வேளையில், நீரிணையின் கட்டுப்பாட்டில் ஈரான் ஆதிக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தானுடனும் ஈராக்குடனும் தனிப்பட்ட ஒப்பந்தங்களைச் செய்து, எண்ணெய், இயற்கை திரவ எரிவாயு போன்றவற்றை அந்த வட்டாரத்தில் இருந்து கப்பல்களைக் கொண்டு ஈரான் அந்நாடுகளை நோக்கி வெளியேற்றி வருகிறது.

அதனைப் போலவே மற்ற நாடுகளும் ஈரானுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள திட்டமிடுகின்றன. எனவே, நீரிணையை ஈரான் நிரந்தரமாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலை வழக்கமாகலாம்.

Read Entire Article