Last Updated:May 12, 2026 3:54 PM IST
விஜய் முதல்வர் பதவியேற்றது குறித்து, சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு பெற்று தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை நேற்று சந்தித்தார்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்திடம், முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, பதில் அளிக்காமல் கைக்கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு ரஜினிகாந்த் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று அங்கிருந்து ரிஷிகேஷ் செல்வதாக அதிகாரிகள் தரப்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டது.
ரஜினியை பொறுத்தவரை அவர் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ரஜினி 174 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.5,000 டெபாசிட்.. 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | Post Office
RDல் மாதம் ரூ.5,000 டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.3,56,830 கிடைக்கும்.
மொத்த முதலீடு ரூ.3,00,000; இதில் வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.56,830 ஆகும்.
இந்த திட்டத்தில் 6.7% வட்டி விகிதம்; குறைந்தபட்சம் மாதம் ரூ.100 டெபாசிட்.
.png)





English (US) ·