School Free Uniforms: ஜூனில் பள்ளி திறப்பு... 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடை தயாரிப்பு பணி தீவிரம்...

13 minutes ago 10

Last Updated:May 19, 2026 8:13 AM IST

விழுப்புரத்தில் 3 லட்சம் மாணவர்களுக்கான விலையில்லா சீருடை தைக்கும் பணி மும்முரம்.

+

News18

News18

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் வரும் ஜூன் மாத 1  ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா சீருடைகளைத் தயாரிக்கும் பணியில் விழுப்புரத்தில் மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு தேவையான அனைத்து விலையில்லா பொருட்களும் தடையின்றி கிடைக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், விழுப்புரம் சேமிப்பு கிடங்குகளில் இருந்து சீருடைத் துணிகள் வெட்டி, தையலுக்காக மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கத்தினரிடம் வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மதிய உணவு திட்டத்தின் கீழ் பயிலும் 1 லட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கான சீருடைகள் தயாரிக்கும் பணியில் மகளிர் கூட்டுறவு சங்கத்தினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 அரசு பள்ளிகள், 17 நகராட்சி பள்ளிகள், 65 அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 199 நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 23 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,512 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதும், 2026-27ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதனுடன், அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ் செய்திகள்/கல்வி/

School Free Uniforms: ஜூனில் பள்ளி திறப்பு... 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடை தயாரிப்பு பணி தீவிரம்...

Read Entire Article