Last Updated:May 20, 2026 9:56 AM IST
Siragadikka Aasai | சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சிந்தாமணியை திட்டி சாபம் கொடுக்கிறார் விஜயா. இதனால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சிந்தாமணியின் சுயரூபத்தை அறிந்த விஜயா, அவரது வீட்டிற்கு வருகிறார். அங்கு வந்ததுமே ஆரம்பத்தில் மாஸ்டர் என மரியாதையாக பேசிக் கொண்டிருந்த சிந்தாமணி, பின்னர் அவர் தன்னை தரக்குறைவாக பேசியதை அடுத்து போடி, வாடி என பேசத் தொடங்குகிறார். அதைப்பார்த்த பார்வதி, இதுதான் இவளுடைய உண்மையான முகம், இத்தனை நாள் உன்கிட்ட அன்பாக இருப்பது போல் நடித்திருக்கிறாள் என சொல்கிறார்.
தன்னுடைய குடும்பத்தையே அவமானப்படுத்திய உன்னை சும்மா விடமாட்டேன் என கூறும் விஜயா, அவருக்கு சாபமும் விட்டிருக்கிறார். இப்படி அநியாய வட்டி வாங்கி நீ காசு சேர்த்து வைப்பதெல்லாம் உன் பொண்ணுக்கு தான, நீ வேணா பாரு உன் பொண்ணு எவனாச்சும் இல்லாத வீட்டு பையனை கூட்டிட்டு ஓட தான் போறா என சொல்கிறார். அதைக்கேட்டதும் கடுப்பாகும் சிந்தாமணி, விஜயாவிடம் வாய மூடு என எச்சரிக்கிறார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்ள, அங்கிருந்து கிளம்பி செல்கிறார் விஜயா.
மறுபுறம் ரவி, ஸ்ருதியிடம் தன்னால் வீட்டை மீட்க எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க, அப்போது ஸ்ருதியின் அம்மா அவர்கள் இருவரையும் கீழே வருமாறு அழைக்கிறார். அங்கு சென்றபின்னர் ஸ்ருதியின் தந்தை, ரவியிடம் நீங்க இப்படி கஷ்டப்படுறது எனக்கு புடிக்கல, அதனால நான் உங்கள் வீட்டை மீட்க ஒரு 10 லட்சம் ரூபாய் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.
ஆனால் ஒரு கண்டிஷன். நான் 10 லட்சம் கொடுத்தால் நீங்கள் இனிமேல் என் மகளோடு இந்த வீட்டில் தான் வாழ வேண்டும் என கூறுகிறார். என்ன அங்கிள் என்னை விலைக்கு வாங்க பாக்குறீங்களா, அதெல்லாம் முடியாது என சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்றுவிடுகிறார் ரவி.
தொடர்ந்து ஸ்ருதியும் ரவியை ப்ரைன்வாஷ் செய்கிறார். நாம ஏன் இதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்க கூடாது. சீக்கிரம் பணத்தை கொடுத்தால் வீட்டை மீட்டுவிடலாம். பிறகு அப்பாவிற்கும் பணத்தை கொடுத்துவிட்டு நம்ம வீட்டிற்கே செல்லலாம் என்று சொல்கிறார். அதற்கு ரவி மறுக்கவே, இல்ல நான் அறிவுரை சொல்றேன். இதுல நீ என்ன முடிவெடுத்தாலும் உன் கூட தான் இருப்பேன் என சொல்கிறார்.
பிறகு மீனா வீட்டிற்கு வந்த ரவி, நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். அதற்கு விஜயா பணம் கொடுக்கிறார் நல்லது தானே என்று சொல்ல, அண்ணாமலை ஏதாவது லாபம் இல்லாமல் அந்த ஆளு இதை பண்ணமாட்டான் என்று சொல்ல ரவியும் ஆமாம் பா என்னைய அந்த வீட்டிலேயே இருக்க சொல்கிறார் என புலம்புகிறார்.
அதற்கு ஸ்ருதி என்ன சொன்னா என முத்து கேட்க, அவ பணத்தை திருப்பி கொடுக்குற வரை நாம அங்கேயே இருக்கலாம் என சொன்னதாக சொல்கிறார். மறுபுறம் விஜயாவும், மீனாவிடம் நீ தலைவி பதவியை விட்டுக்கொடுத்தால், நம் வீட்டை மீட்கலாம் தானே, நீ ஏன் அந்த பதவியில் இருந்து விலகக்கூடாது என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Safety Pin-ல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?
துளை ஸ்பிரிங் போல செயல்பட்டு முள் முனையை உறுதியாக பிடிக்க உதவுகிறது.
ஸ்பிரிங் அமைப்பு இல்லையெனில், கூர்மையான முனை மீண்டும் மீண்டும் திறக்கும்.
ஒரு கம்பியை வளைப்பதன் மூலம் அவர் இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார்.
.png)





English (US) ·