Siragadikka Aasai : ஸ்ருதி வீட்டில் வெடித்த பிரச்சனை; உடனே வெளியேறிய விஜயா... வசமாக சிக்கப்போகும் மனோஜ்

20 hours ago 9

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வீட்டில் தங்கி இருந்த விஜயா, தன்னுடைய சம்மந்தி உடன் சண்டைபோட்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

2 Min read

Published : May 12 2026, 08:57 AM IST

15

Siragadikka Aasai Serial Today Episode

Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் வீடு ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டதால், அண்ணாமலை தற்போது மீனா வீட்டிலும், விஜயா வசதிக்கு ஆசைப்பட்டு ஸ்ருதி வீட்டிலும் வசித்து வருகிறார்கள். மீனா வீட்டில் வசதி கம்மியாக இருந்தாலும் அங்கு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அண்ணாமலை. மறுபுறம் பணக்கார வீடு என ஆசைப்பட்டு போன விஜயாவுக்கு அங்கு நிம்மதியே இல்லை. ஒழுங்கான சாப்பாடு இல்லை, சம்மந்தியால் அவமானம் என பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே சகித்துக் கொண்டு அந்த வீட்டில் வசித்து வருகிறார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

25

மனோஜை மயக்கிய ரோகிணி

Image Credit : jiohotstar

மனோஜை மயக்கிய ரோகிணி

மனோஜ் தன்னுடைய ஷோரூமில் எலித் தொல்லை இருப்பதாக சொன்னதை அடுத்து, அதனை விரட்ட நான் ஏற்பாடு செய்கிறேன் என சொல்லி இருந்த ரோகிணி, இரவில் ஷோரூமுக்கு வருகிறார். அவர் பூனை ஒன்றை எடுத்து வந்துள்ளார். எலியை விரட்டும் வேலையை அது பார்த்துக் கொள்ளும் என கூறும் ரோகிணி, மனோஜை தனியாக அழைத்துச் சென்று பேசுகிறார். அப்போது மனோஜ், அம்மா - அப்பா இருவரும் பிரிந்து எப்படி தான் இருக்கிறார்களோ என பேசிக் கொண்டிருக்க, ரோகிணியும் நானும் உன்னை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுகிறேன் என ரோகிணி சொன்னதும், மனம் உருகும் மனோஜ், அவரிடம் பணிந்து பேசுகிறார்.

35

ரேகாவுக்கு வந்த டவுட்

Image Credit : jiohotstar

ரேகாவுக்கு வந்த டவுட்

மறுபுறம் முத்து தன்னுடைய மாமியார் வீட்டில் சந்தோஷமாக வாழ்கிறார். அவர் தன்னுடைய மனைவி மீனா மற்றும் மாமியார் ஆகியோரை அமர வைத்து அவர்களுக்கு சப்பாடு பரிமாறுகிறார். அதைப்பார்த்த மீனாவின் அம்மா, ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகு தான் நாங்க சாப்பிடுவோம் என சொல்ல, அதெல்லாம் அந்த காலம், இப்போ அப்படி இல்ல என சொல்கிறார். பின்னர் சத்யா மாடியில் தனியாக நின்று கொண்டிருக்க, அவரிடம் என்ன பிரச்சனை என முத்துவும் மீனாவும் கேட்கிறார்கள். அப்போது அவர் ரேகாவுக்கு அவருடைய அப்பா மீது சந்தேகம் வந்ததாக கூறுகிறார்.

45

ஸ்ருதி வீட்டில் பார்ட்டி

Image Credit : jiohotstar

ஸ்ருதி வீட்டில் பார்ட்டி

இதையடுத்து ஸ்ருதி வீட்டில் இருக்கும் விஜயாவை தான் காட்டுகிறார்கள். ரூமில் தனியாக இருக்கும் விஜயாவை ஹாலுக்கு அழைத்து செல்கிறார் ஸ்ருதியின் அம்மா, அங்கு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்ருதி அப்பாவின் நண்பர்கள் வந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்து முகம் சுழிக்கிறார் விஜயா. அங்கு வந்திருந்த நபர் ஒருவர் விஜயாவை பார்த்து லுக் விட்டுக் கொண்டே இருக்கிறார். பின்னர் அவர் பார்ப்பதற்கு மலையாள ஹீரோயின் போல இருப்பதாக சொல்கிறார்.

55

கடும் அப்செட்டில் விஜயா

Image Credit : jiohotstar

கடும் அப்செட்டில் விஜயா

பின்னர் அருகில் வந்து டான்ஸ் ஆடுகிறார். அப்போது ஸ்ருதியின் அம்மா, என் சம்மந்தியும் நல்லா டான்ஸ் ஆடுவாங்க என சொல்ல, விஜயாவையும் ஆட சொல்கிறார்கள். அப்போது கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா, இங்க டான்ஸ் ஆடவா நான் வந்திருக்கேன் என சொல்லி கத்துகிறார். பின்னர் மாடிக்கு சென்று கதறி அழும் விஜயா, தன்னுடைய மகன் மனோஜுக்கு போன் போட்டு, தான் உடனே உன்னுடைய ஷோரூமுக்கு வர உள்ளதாக கூறுகிறார். இதையடுத்து ஸ்ருதி வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read Entire Article