Sivakarthikeyan | தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்… 13 ஆண்டுகள் முன் நடந்த சம்பவம்!

2 hours ago 19

Last Updated:Feb 22, 2026 10:10 AM IST

அமரன் படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். அப்போது அவர் தனுஷ் குறித்து பேசினார்.

 இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’. சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது.

 படம் வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா கேரள மாநிலம் கொச்சியில் பிரமாண்டமாக நடைபெற்றது.

 இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இது நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கும் முதல் ஃபிலிம் பேர் விருது என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற பின் நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 இது தொடர்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “இது என்னுடைய முதல் ஃபிலிம் பேர் விருது. விருது குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. 13 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ், என்னிடம் ‘வா ஜாலியா பிலிம் ஃபேர் போய்டு வரலாம்’ எனக் கூறினார். நானும் அப்போது தனுஷ் சாருடன் ஃபிலிம் பேர் விருது விழாவுக்கு வந்திருந்தேன். அப்போது இரண்டாவது வரிசையில் அமர இடம் கொடுத்தார்கள். அங்கிருந்து முதல் வரிசைக்கு வர எனக்கு 13 ஆண்டுகள் ஆகியிருக்கிறது” என்றார்.

 நடிகர் சிவகார்த்திகேயன் ‘மெரினா’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் காமெடியனாக கவனம் பெற்றார். தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது. இப்படி சிவகார்த்திகேயன் சினிமா வளர்ச்சியில் தனுஷ் உதவிகரமாக இருந்ததாக கூறப்பட்டது.

 ஆனால், சமீபகாலமாக தனுஷ் - சிவகார்த்திகேயன் உறவில் விரிசல் ஏற்பட்டதாக பேசப்பட்ட நிலையில், மேடையில் தனுஷ் பெயரை சிவகார்த்திகேயன் பயன்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறுவது அநீதியின் உச்சக்கட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்

மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என கூறுவது அநீதியின் உச்சம் - தமிழிசை

  • மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறுவது அநீதியின் உச்சக்கட்டம் - தமிழிசை

  • தேமுதிக-திமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி, இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படும்

  • எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article