"எத்தனை தொகுதிகள் என்பது பிரச்னையில்லை... திமுக கூட்டணியில் தொடர்வோம்..." - ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டம்

1 hour ago 18

Last Updated:Feb 22, 2026 12:27 PM IST

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என Chennai Anna Arivalayam பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினார்.

காதர் மொய்தீன்
காதர் மொய்தீன்

திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஐ.யு.எம்.எல். தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர் கே.என். நேரு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என 7 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளது.

இன்று முதல் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்த திமுக, முதல்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் பேசியதாவது:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஐந்து தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கடந்த தேர்தலை விட இந்த முறை திமுகவும் கூட்டணி கட்சிக்காக தொகுதிகளை குறைத்துக் கொள்ள உள்ளது என டி.ஆர். பாலு பேச்சுவார்த்தையின்போது தெரிவித்ததாக காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

மூன்று தொகுதியில் ஒரு தொகுதியை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என தங்களிடம் வலியுறுத்தி உள்ளதாக காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் எங்கள் கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் வலியுறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"5 தொகுதிகளா 3, 2 தொகுதிகளா என்பது பிரச்சனை இல்லை. எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்" என்றும் காதர் மொகிதீன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

First Published :

Feb 22, 2026 12:27 PM IST

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

"எத்தனை தொகுதிகள் என்பது பிரச்னையில்லை... திமுக கூட்டணியில் தொடர்வோம்..." - ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டம்

Read Entire Article