Summer Home Cooling Tips: கோடை வெயில் கடுமையாக வாட்டும் விலையில், ஏசி இல்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
14

Image Credit : AI
ஏசி இல்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைக்கும் டிப்ஸ்
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க நாள் முழுவதும் ஏசியைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் சாத்தியமற்றது. அதிகப்படியான மின்சாரக் கட்டணத்தைத் தவிர்க்கவும், ஏசி வசதி இல்லாத வீடுகளிலும் குளிர்ச்சியை நமது வீட்டிலேயே பெற முடியும். அது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
வெப்பம் ஊடுருவாமல் தடுத்தல்
வெப்பம் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க ஜன்னல்களை சரியாக மூடி வைக்க வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஜன்னல்களை மூடி வைக்கவும். அடர் நிறங்கள் வெப்பத்தை ஈர்க்கும் என்பதால், வெளிர் நிறத் திரைகளையே பயன்படுத்தவும். 'பிளாக்-அவுட்' (Black-out) திரைகள் அல்லது வெப்பத்தைப் பிரதிபலிக்கும் ஃபிலிம்கள் ஜன்னல் வழியாக வரும் வெப்பத்தை பெருமளவு குறைக்கும்.
Add Asianetnews Tamil as a Preferred Source
24
Image Credit : AI Meta
ஃபேன்கள் பயன்பாடு முக்கியம்
சீலிங் ஃபேன்கள் கடிகாரத் திசைக்கு எதிராக (Anti-clockwise) சுழலும்போது குளிர்ந்த காற்றை கீழ்நோக்கித் தள்ளும். (இந்த வசதி இருக்கும் விசிறிகளில் இதைப் பயன்படுத்தலாம்).
பனிக்கட்டி முறை: டேபிள் ஃபேனுக்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் பனிக்கட்டிகள் அல்லது குளிர்ந்த நீரை வைப்பதன் மூலம் 'ஏர் கூலர்' போன்ற குளிர்ச்சியைப் பெற முடியும்.
வெப்பக்காற்று வெளியேற்றம்: சமையலறை மற்றும் குளியலறையில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன்கள் (Exhaust Fans), உள்ளிருக்கும் வெப்பக்காற்றை வெளியேற்றி அறையை இதமாக்க உதவும்.
மின்சாதனங்களின் பயன்பாட்டை குறைத்தல்
டிவி, லேப்டாப் மற்றும் பழைய வகை மின்விளக்குகள் அதிக வெப்பத்தை உமிழக்கூடியவை. தேவையற்ற நேரங்களில் இவற்றை அணைத்து விடுங்கள். பழைய குண்டு பல்புகளுக்குப் பதிலாக குறைந்த வெப்பத்தை வெளியிடும் LED விளக்குகளை மாற்றலாம். மதிய வேளைகளில் அதிக வெப்பத்தை உண்டாக்கும் ஓவன் பயன்பாடு மற்றும் சமையலைத் தவிர்ப்பது நல்லது.
34
Image Credit : Pinterest
இயற்கையான காற்றோட்டம்
வீட்டிற்குள் காற்று தேங்கி நின்றால் அனல் அதிகமாகத் தெரியும். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து, காற்று தடையின்றி வீட்டிற்குள் வந்து செல்ல வழிவகை செய்யுங்கள்.
உடைகளிலும் கவனம்
செயற்கை இழைத் துணிகளைத் தவிர்த்து, காற்றோட்டமான பருத்தி (Cotton) ஆடைகளை அணியுங்கள். படுக்கை விரிப்புகளும் பருத்தியால் ஆனதாக இருந்தால் வியர்வையை உறிஞ்சி, உடல் குளிர்ச்சியாக இருக்க உதவும்.
பசுமை மற்றும் ஈரப்பதம்
உள்அரங்கு தாவரங்கள்: சோற்றுக்கற்றாழை, ஸ்நேக் பிளான்ட், அரேகா பாம் போன்ற செடிகள் காற்றில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி வெப்பத்தைத் தணிக்கின்றன.
தரை துடைத்தல்: மதிய நேரங்களில் குளிர்ந்த நீரால் தரையைத் துடைப்பது, தரையில் உள்ள வெப்பத்தை நீக்கி அறையின் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.
44
Image Credit : Gemini AI
மொட்டை மாடி
வீட்டின் மேற்கூரை வழியாகவே அதிக வெப்பம் இறங்கும். இதற்கு தீர்வாக வெப்பத்தைப் பிரதிபலிக்கும் வெள்ளைப் பூச்சு (Reflective white paint) பூசலாம். மூங்கில் பாய்களைப் பயன்படுத்துவது அல்லது மாடித் தோட்டம் அமைப்பது சிறந்தது. மாலையில் மொட்டை மாடியில் தண்ணீர் தெளிப்பது கீழ் அறைகளை மிக விரைவில் குளிர்ச்சியாக்கும்.
உணவு மற்றும் நீர்ச்சத்து
உடல் வெப்பத்தைக் குறைக்க அதிகப்படியான தண்ணீர், இளநீர், மோர் மற்றும் எலுமிச்சை சாறு குடிக்கவும். வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
.png)
58 minutes ago
12






English (US) ·