TASMAC Shops | 717 மதுபான கடைகளை மூட உத்தரவு.. முதலமைச்சர் விஜய் அதிரடி.!

21 hours ago 8

Last Updated:May 12, 2026 8:11 AM IST

CM Vijay Order | முதலமைச்சர் விஜய், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை 2 வாரத்தில் மூட உத்தரவு..!

Tasmac
Tasmac

தமிழகத்தில் உள்ள 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வென்று தனி பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118-ஐ அக்கட்சியால் நெருங்கமுடியவில்லை. இதனால், அக்கட்சி ஆட்சி அமைக்கவும் முடியாமல், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கவும் முடியாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது தவெக. அதன்படி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரியது தவெக. இதனை ஏற்ற காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதேபோல், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை நிபந்தனையின்றி, வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன.

தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், முதல் 3 கையெழுத்திலேயே போதைக்கு எதிராக ஆதரவை தெரிவித்தார். இந்த நிலையில், வழிபாட்டு தலங்கள் கல்வி நிலையங்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்கள் சுற்றி 500 மீட்டர் வரை உள்ள கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 276 கடைகளும், கல்வி நிலையங்கள் அருகே உள்ள 186 கடைகளும், பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான கடைகளை அடுத்த 2 வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read Entire Article