Last Updated:May 15, 2026 6:31 PM IST
Thai Patti Lemon| குறைந்த பராமரிப்பில் அதிக மகசூல் தரும் தாய் பத்தி லெமன் செடி தற்போது தோட்ட ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

கோடை காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் எலுமிச்சை பழங்களில் தற்போது “தாய் பத்தி லெமன்” என்ற புதிய ரக எலுமிச்சை செடி தோட்ட ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் வெயில் நிலவும் நேரத்தில் இந்த வகை எலுமிச்சை செடி அதிக மகசூல் தருவதால், வீட்டு தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களில் பலரும் இதை வளர்க்க தொடங்கியுள்ளனர்.
இந்த தாய் பத்தி லெமன் செடியின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், செடி நன்றாக வளர்ந்து ஒரே ஆண்டிற்குள் காய்களைத் தரத் தொடங்கிவிடுகிறது. மேலும் சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு பழங்கள் மட்டுமல்லாமல், கொத்து கொத்தாக காய்க்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு தேவைக்கேற்ப எப்போதும் புதிய எலுமிச்சை பழங்களை பெற முடிவதாக தோட்டக்கலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த எலுமிச்சை பழங்கள் முழுமையாக மஞ்சள் நிறமாக மாறாமல், லேசான பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்படும். செடியை தினமும் சரியாக பராமரித்து வந்தால், பழுத்த காய்கள் தானாகவே கீழே விழத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதிக வெயில் கிடைக்கும் இடங்களில் இந்த செடி மிகவும் சிறப்பாக வளரக்கூடியதால், மாடித்தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் வைத்திருப்போரும் இந்த வகை செடியை அதிக ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர்.
மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வளர்ச்சியடைந்த பின்னர் இந்த செடி ஏராளமான காய்களைத் தரும் என்பதால், குடும்ப சமையலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எலுமிச்சை சாதம், புளிக்குழம்பு உள்ளிட்ட பல வகை உணவுகளில் இந்த எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பயன்படுத்திய தோலை கல் உப்புடன் சேர்த்து ஊறவைத்து வைத்தால், கோடை காலத்தில் தயிர் சாதத்திற்கு சிறந்த துணை உணவாக இருக்கும் என வீட்டுத்தோட்ட ஆர்வலர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு குறைந்த பராமரிப்பில் அதிக மகசூல் தரும் தாய் பத்தி லெமன் செடி தற்போது தோட்ட ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. வெயில் காலத்திற்கு ஏற்ற இந்த வகை எலுமிச்சை செடியை வீடுகளில் வளர்த்தால், ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பழங்களை எளிதாகப் பெற முடியும் என்பதால், பொதுமக்களும் ஆர்வத்துடன் இந்த செடியை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா?
தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்ந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.
மேற்காசிய போர் காரணமாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு.
தங்கம் விலை உயர்வு நகை சந்தையில் மந்தநிலையை உருவாக்கி உள்ளது.
.png)






English (US) ·