Last Updated:May 12, 2026 6:24 PM IST
Thayumanavar scheme| 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘தாயுமானவர்’ வீட்டு ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டம் தற்போது நிதி சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த திட்டத்திற்கான செலவுத் தொகையை அரசு முழுமையாக வழங்காததால், பல கூட்டுறவு சங்கங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகின்றன.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘தாயுமானவர்’ வீட்டு ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 16.73 லட்சம் பேருக்கு வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திட்ட வழிகாட்டுதலின்படி, மலைப்பகுதிகளில் ஒரு ரேஷன் அட்டைக்கு ரூ.100, கிராமப்புறங்களில் ரூ.40 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.36 வரை வாகனச் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் தனியாக தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டம் தொடங்கியதிலிருந்து இந்த தொகைகள் முழுமையாக கிடைக்கவில்லை என கூட்டுறவு சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இதனால் பல கூட்டுறவு சங்கங்கள் தங்களது சொந்த நிதியிலிருந்தே திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், ஏற்கனவே பல கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, வாகன வாடகை, எரிபொருள் செலவு மற்றும் பணியாளர் சம்பளங்களை சமாளிக்க முடியாமல் நிர்வாகிகள் திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் செயல்பட்டு வரும் சில கூட்டுறவு பண்டக சாலைகள், இந்த திட்டத்தின் கூடுதல் செலவை நீண்ட காலம் சமாளிப்பது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளன. அரசு தரப்பில் மானியத் தொகையுடன் இந்த செலவுகளும் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தாலும், அந்த தொகைகள் நிலுவையில் உள்ளதாக சங்கங்கள் வேதனை தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நிலுவைத் தொகைகள் விரைவில் வழங்கப்படாவிட்டால், அடுத்த மாதங்களில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயனாளிகள் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்ற கவலையும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு உடனடியாக நிலுவை நிதியை வழங்கி, ‘தாயுமானவர்’ திட்டத்தை தொடர்ந்து சீராக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension
EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.
ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.
.png)






English (US) ·