Last Updated:May 11, 2026 10:58 AM IST
TN Rain Alert | தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News18
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 0.9 கி.மீ உயரத்தில் குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. மேலும், சுமார் 1.5 கி.மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தை பொருத்தவரை, கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வரும் நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 14ஆம் தேதி வரை மதுரையில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு நீடித்தாலும், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
May 11, 2026 10:58 AM IST
.png)








English (US) ·