Tamilnadu CM Joseph Vijay Coat suit : தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், கோட் சூட் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல் அரசியல்வாதி என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.
14

Image Credit : X
Secret Behind Vijay Coat suit
முதல்வராக பதவியேற்ற விஜய்யின் கருப்பு நிற கோட்-சூட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை அரசியல்வாதிகள் என்றால் வேஷ்டி மற்றும் வெள்ளை நிற சட்டை அணிவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்து முதன்முறையாக கோட் சூட் போட்டு சட்டசபைக்குள் சென்ற முதல்வர் என்கிற பெருமையை பெற்றார் விஜய். இந்த கோட் சூட் நம்நாட்டு உடை இல்லை. நம்முடைய பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து விஜய் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்கிற கமெண்டுகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
Add Asianetnews Tamil as a Preferred Source
24
Image Credit : Asianet News
விஜய்யின் 'கோட்-சூட்' ரகசியம்
ஆனால் விஜய், ஏன் வழி தனி வழி என்பது போல் கோட் சூட்டிலேயே பயணித்து வருகிறார். விஜய்யின் இந்த கோட் சூட் பற்றிய சுவாரஸ்ய பின்னணியை தற்போது பார்க்கலாம். பிரபல ஆடை வடிவமைப்பாளரான சபிர் அகமது தான் இந்த கோட்-சூட்டை வடிவமைத்துள்ளாராம். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த "பீஸ்ட்" படத்தின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த கோட்-சூட் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோட் நிறமாக கருப்பை தேர்வு செய்தது விஜய் தானாம். கருப்பு என்பது அதிகாரம், ஆளுமை மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் நிறம் என்பதால் அதை அவர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
34
Image Credit : Asianet News
ட்ரெண்ட் செட்டராக மாறிய விஜய்
விஜய்யின் உடலமைப்புக்கு ஏற்றவாறு ஃபிட்டாக பொருந்தும் வகையில் கோட் சூட்டை சீர் செய்ய மட்டும் 2 நாட்கள் எடுத்துக் கொண்டாராம் ஆடை வடிவமைப்பாளர். தமிழ்நாட்டு முதல்வர்கள் பின்பற்றிய வேட்டி சட்டை பாரம்பரியத்தை உடைத்து, விஜய் கோட் சூட்டில் முதல்வராக பதவியேற்றது கவனம் ஈர்த்துள்ளது. விஜய் முதல்வராக பதவி ஏற்ற பின்னர் ஒரு சூப்பரான விஷயத்தை செய்தார். நேற்று தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளான மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரது இல்லங்களுக்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றார்.
44
Image Credit : MK Stalin/X
பாராட்டை பெறும் விஜய்யின் செயல்கள்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பில் அமர்ந்த உடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானதாக, இன்று 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்தார். பள்ளி, கல்லூரி, கோவில்கள் அருகே உள்ள இந்த 717 கடைகளை அகற்ற விஜய் உத்தரவிட்டுள்ளதற்கு கமல்ஹாசன், பிரேமலதா உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர். இன்னும் சில தினங்களில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
.png)
14 hours ago
14





English (US) ·