Water Tank: கருப்பா? வெள்ளையா? நீலமா? உங்க வீட்டுக்கு எந்த கலர் வாட்டர் டேங்க் பெஸ்ட்? எது ஆரோக்கியமானது?

1 hour ago 10

Water Tank: எல்லாருடைய வீட்டு மொட்டை மாடியிலும் வாட்டர் டேங்க் கண்டிப்பாக இருக்கும். கருப்பு, வெள்ளை, நீல நிறங்களில் தான் இவை இருக்கும். இந்த நிறங்கள், டேங்கில் இருக்கும் தண்ணீரின் தரம் மற்றும் வெப்பநிலையை எப்படி பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.

25

கருப்பு, வெள்ளை, நீல நிற டேங்குகளில் என்ன வித்தியாசம்?

Image Credit : Gemini AI

கருப்பு, வெள்ளை, நீல நிற டேங்குகளில் என்ன வித்தியாசம்?

கருப்பு நிற டேங்க்: பெரும்பாலான வீடுகளில் கருப்பு டேங்க்தான் இருக்கும். நல்ல தரமான கருப்பு டேங்குகளில் UV பாதுகாப்பு இருப்பதால், சூரியனின் புற ஊதா கதிர்களால் பிளாஸ்டிக் சேதமடையாது. ஆனால், கருப்பு நிறம் வெப்பத்தை அதிகம் ஈர்ப்பதால், உள்ளே இருக்கும் தண்ணீர் சூடாக வாய்ப்புள்ளது. 

வெள்ளை நிற டேங்க்: வெள்ளை நிறம் சூரிய ஒளியை அதிகம் பிரதிபலிப்பதால், டேங்க் குறைவாகவே சூடாகும். ஆனால், இதில் தூசி, அழுக்கு எளிதாகத் தெரியும். தரம் குறைவாக இருந்தால், காலப்போக்கில் நிறம் மங்கவும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:Toilet Cleaning: இனி மணிக்கணக்கில் தேய்க்க தேவையில்லை! டாய்லெட் கறைகளை நொடியில் போக்க சூப்பர் டிப்ஸ்!

35

நீல நிற டேங்க் பிரபலம்

Image Credit : Gemini AI

நீல நிற டேங்க் பிரபலம்

45

நிறத்தை விட டேங்கின் தரம் ஏன் முக்கியம்?

Image Credit : Gemini AI

நிறத்தை விட டேங்கின் தரம் ஏன் முக்கியம்?

வாட்டர் டேங்க் வாங்கும் போது, நிறத்தை விட சில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். அது 'ஃபுட்-கிரேடு' (Food-Grade) பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்க வேண்டும். UV பாதுகாப்பு இருக்க வேண்டும். BIS அல்லது ISI போன்ற தரச் சான்றிதழ்கள் இருக்க வேண்டும். 3, 4 அல்லது 5 லேயர் கொண்ட டேங்க் இன்னும் சிறந்தது. மேலும், தூசி, பூச்சிகள் உள்ளே செல்லாதபடி, டேங்க் மூடி இறுக்கமாக இருக்க வேண்டும்.

55

எத்தனை லேயர் டேங்க் வாங்க வேண்டும்?

Image Credit : Gemini AI

எத்தனை லேயர் டேங்க் வாங்க வேண்டும்?

வெயில் அதிகம் உள்ள பகுதிகளில், மொட்டை மாடியில் டேங்க் வைத்தால், குறைந்தது 3 அல்லது அதற்கு மேற்பட்ட லேயர்கள் கொண்ட நல்ல தரமான டேங்க் வாங்குவது நல்லது. மல்டி-லேயர் டேங்க், வெளிப்புற வெப்பம் உள்ளே இருக்கும் தண்ணீரை பாதிப்பதைக் குறைக்கும். ஆனால், அதிக லேயர்கள் இருப்பதாலேயே ஒரு டேங்க் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. 

தயாரிப்புத் தரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மெட்டீரியலும் முக்கியம். டேங்க் எந்த நிறமாக இருந்தாலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். இது அழுக்கு, பாக்டீரியா, பாசி சேர்வதைத் தடுத்து, தண்ணீரை சுத்தமாக வைத்திருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read Entire Article