With Love Movie Box Office: இளசுகளை மயக்கிய 'வித் லவ்' திரைப்படம் வெளியான 10 நாளில் 5 மடங்கு லாபம் ஈட்டியுள்ளது. இந்த படத்தின் வசூல் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
14

Image Credit : X
இளசுகளை மயக்கிய 'வித் லவ்' திரைப்படம்
'டூரிஸ்ட் பேமிலி' எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இவரது நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான 'வித் லவ்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அபிஷன் ஜீவிந்த்திடம் இணை இயக்குனராக இருந்த மதன் இயக்கியுள்ள இந்த படத்தில் கேரள நடிகை அனஸ்வரா ராஜன் அபிஷன் ஜீவிந்த்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெய்ன்ட்மெண்ட் மற்றும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
24
Image Credit : X
10 நாளில் ரூ.25 கோடி வசூல்
பள்ளிப்பருவ காதல், 90 கிட்ஸ்களின் காதல் நினைவுகளை நினைவுப்படுத்தும் வகையிலான கதைக்களம் கொண்ட 'வித் லவ்' திரைப்படம் தொடர்ந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. வெளியான நாளில் இருந்து வசூல் வேட்டையாடி வந்த 'வித் லவ்' 10 நாளில் உலகளவில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
34
Image Credit : X
இந்த ஆண்டின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர்
இதன்மூலம் இந்த ஆண்டின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் திரைப்படம் என்ற பெருமையை 'வித் லவ்' பெற்றுள்ளது. சுமார் 5 கோடி என்ற சிறிய பட்ஜெட்டில் உருவான 'வித் லவ்' திரைப்படம் வெளியான 10 நாட்களில் இதுவரை மட்டும் தயாரிப்பு செலவை விட 5 மடங்கு அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
காதல் காவியம் என்பதால் இளசுகளிடம் இப்படத்துக்கு தொடர்ந்து அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் 'வித் லவ்' இன்னும் பல கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
44
Image Credit : stockPhoto
சிறு பட்ஜெட் படங்களுக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவு
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் என பெரிய படங்களே ஓடும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், அண்மைகாலமாக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் பெரிய வசூல் குவித்து வருவது நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' ரூ.7 அல்லது ரூ.8 கோடியில் உருவாகி ரூ.90 கோடி என மெகா வசூல் செய்தது. இதேபோல் ரூ.35 கோடி செலவில் உருவான 'டிராகன்' ரூ.135 கோடியும், ரூ.10 கோடியில் உருவான 'மாமன்' ரூ.50 கோடி வரை வசூலீட்டியதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
.png)
1 hour ago
13





English (US) ·