Youtube Training Course : யூடியூப்பில் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

43 minutes ago 10

தமிழக அரசின் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி வருமானம் ஈட்டுவது குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் வீடியோ உருவாக்கம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற பல்வேறு தலைப்புகளில் நிபுணத்துவம் வழங்கப்படும்.

2 Min read

Published : May 15 2026, 06:37 PM IST

16

வேலை வாய்ப்பை உருவாக்கும் தமிழக அரசு

Image Credit : Asianet News

வேலை வாய்ப்பை உருவாக்கும் தமிழக அரசு

ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி பல்வேறு ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் தனியார் துறை வேலையில் இணையும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் நடத்தி பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பிற்கு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்தாக சொந்தமாக தொழில் செய்ய திட்டமிடுபவர்களுக்காக சுய தொழில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

26

யூடியூப் சேனல்

Image Credit : Google

யூடியூப் சேனல்

அந்த வகையில் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்களது திறமைகளை வீடியோவாக பதிவு செய்து டியூப்பில் பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போதும் பலரும் லட்சத்தில் சம்பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் யூடிப்பில் சேனல் தொடர்பாகவும், வீடியோ மற்றும் மார்க்கெட்டிங் செய்வது தொடர்பாக தமிழக அரசு சார்பாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.

36

 தமிழக அரசு

Image Credit : Asianet News

தமிழக அரசு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII–TN), சென்னை சார்பில், “சொந்த YouTube சேனலை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி திட்டம் 25.05.2026 முதல் 27.05.2026 வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை EDII-TN வளாகம், சென்னை – 600 032 இல் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆன்லைன் விளம்பர முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும்.

46

Image Credit : our own

பயிற்சியில் இடம்பெறும் தலைப்புகள் பின்வருமாறு:

வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்குதல், சமூக வலைதள சந்தைப்படுத்தல் மற்றும் சமூக வலைதள இணைப்பு, வாடிக்கையாளர் வலையமைப்பை அதிகரிக்கும் முறைகள், திறமையான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள், ஆன்லைன் மார்க்கெட்டிங் முறைகள், டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் தொடர்பான அறிமுகம், இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த பயிற்சி, YouTube சேனலை தொடங்கி திறமையாக நிர்வகிக்க விரும்பும் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

56

குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி

Image Credit : Asianet News

குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் ஆண்/பெண்/திருநங்கைகள்/ திருநம்பிகள்/ 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி வழங்கப்படும். தங்கும் வசதி தேவையுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

66

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Image Credit : our own

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், எண் 1, EDI இன்ஸ்டிடியூட் சாலை, SIDCO தொழில்துறை எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600032. தொலைபேசி / கைபேசி: 9360221280 / 8668100181 முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article