Zodiac Signs: தோஷங்களை நீக்கும் முத்து.! இந்த 4 ராசிக்காரர்கள் முத்து அணிந்தால் விதியே மாறும்.! உங்க ராசி இருக்கா?

2 hours ago 14

Muthu Mothiram Benefits in Tamil: ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிக்காரர்கள் முத்து அணிவதால் அவர்களின் அதிர்ஷ்டம் பெருகும் என்றும், அவர்களின் தலைவிதையே மாறும் என்றும் கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read

Published : Feb 10 2026, 01:48 PM IST

16

முத்து அணிவதால் தலைவிதி மாறும் ராசிகள்

Image Credit : AI

முத்து அணிவதால் தலைவிதி மாறும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ரத்தினம் உண்டு. அந்த வகையில் மனதிற்கும், குளிர்ச்சிக்கும் அதிபதியான சந்திர பகவானின் ரத்தினமாக முத்து விளங்கி வருகிறது. நவரத்தினங்களில் முத்து மிகவும் மென்மையானது மற்றும் சக்தி வாய்ந்தது. சந்திரன் பலவீனமாக இருப்பவர்கள் முத்து அணிவதன் மூலம் மன அமைதியையும், செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெற முடியும். குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் முத்து அணிவது அவர்களின் தலைவிதியையே மாற்றும் அளவிற்கு நற்பலன்கள் தேடி வரும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.

26

மேஷம்

Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசிக்காரர்களை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். மேஷ ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிக ஆற்றல் மற்றும் ஆக்ரோஷத்துடன் காணப்படுவார்கள். மேஷ ராசியின் நான்காம் வீட்டின் அதிபதியாக சந்திர பகவான் விளங்கி வருகிறார். 4-ம் வீடு என்பது சுகபோகம், தாய், வாகனத்தை குறிக்கும் வீடாகும். மேஷ ராசிக்காரர்கள் முத்து அணிவதால் நிலம், வீடு தொடர்பான சிக்கல்கள் தீரும். தாயுடன் உறவு பலப்படும். மன அழுத்தம் குறைந்து எப்போதும் ஒருவித புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

36

கடகம்

Image Credit : stockPhoto

கடகம்

கடக ராசிக்கு அதிபதியாக சந்திர பகவான் விளங்கி வருகிறார். எனவே இவர்களுக்கு முத்து என்பது ‘அதிர்ஷ்ட தேவதை’ என்றே சொல்லலாம். கடக ராசிக்காரர்கள் முத்து அணிவதால் அடிக்கடி மாறும் மனநிலை கட்டுப்படும். அதிகப்படியான கோபம் குறைந்து நிதானம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இக்கட்டான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவும். இன்னும் சொல்லப்போனால் கடக ராசிக்காரர்கள் முத்து அணிந்த பிறகு அவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறும்.

46

விருச்சிகம்

Image Credit : stockPhoto

விருச்சிகம்

விருச்சிக ராசி என்பது சந்திர பகவான் நீச்சப் பெரும் ராசியாகும். அதாவது இந்த ராசியில் சந்திர பகவானின் பலம் முழுமையாக வெளிப்படாது. அவர் பலவீனமாக காணப்படுவார். எனவே இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் மன குழப்பத்துடனும், தேவையற்ற பயத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் முத்து அணியும் போது எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைபட்ட நின்ற காரியங்கள் தடையின்றி நடக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி உடல் நலம் மேம்படும்.

56

மீனம்

Image Credit : stockPhoto

மீனம்

மீன ராசிக்கு சந்திரன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக விளங்குகிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணியம், புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். மீன ராசிக்காரர்கள் முத்து அணிந்தால் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். மேலும் மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

66

முத்து அணியும் பொழுது கவனிக்க வேண்டியவை

Image Credit : Asianet News

முத்து அணியும் பொழுது கவனிக்க வேண்டியவை

முத்து அணிவது எவ்வளவு நன்மைகளை தருமோ, அதே அளவிற்கு அதை சரியான முறையில் அணிவதும் அவசியம். முத்தை எப்போதும் வெள்ளியில் பதித்து அணிவது முழுமையான பலன்களைத் தரும். வலது கையின் மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் அணியலாம். திங்கட்கிழமை காலையில் சந்திர ஓரையில் முறைப்படி பூஜை செய்து அணிவது சிறப்பு. முத்து அணிவது அனைவருக்கும் ஒத்து வராது. ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தால் அல்லது ராகு கேதுவுடன் இணைந்து இருந்தால் தகுந்த ஜோதிடரை ஆலோசித்து, அதன் பின்னர் அணிவது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read Entire Article