RentAHuman AI தளம் மூலம் இனி ரோபோக்கள் மனிதர்களை வேலைக்கு அமர்த்தும். டெலிவரி முதல் வீட்டு வேலைகள் வரை AI கட்டளையிடும் புதிய மாற்றம் பற்றி அறியலாம். சம்பளம் எவ்வளவு தெரியுமா?
15

Image Credit : Gemini
RentAHuman
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதுவரை மின்னஞ்சல் அனுப்புவது, அட்டவணைகளை நிர்வகிப்பது மற்றும் ஆவணங்களைச் சுருக்கித் தருவது போன்ற டிஜிட்டல் பணிகளை மட்டுமே AI செய்து வந்தது. ஆனால், இணைய உலகைத் தாண்டி நிஜ உலகில் ஒரு வேலையைச் செய்ய நினைத்தால் AI என்ன செய்யும்? அதற்கான விடையாகவே 'RentAHuman AI' (ரென்ட் ஏ ஹியூமன்) என்ற புதிய தளம் உருவாகியுள்ளது. இது கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், இனி AI ஏஜெண்டுகள் மனிதர்களை வேலைக்கு அமர்த்தும் காலம் வந்துவிட்டது.
25
Image Credit : Asianet News
ரோபோக்களுக்கு ஏன் மனிதர்கள் தேவை?
இந்தத் தளத்தின் மையக்கரு மிகவும் சுவாரஸ்யமானது. "ரோபோக்களால் புல்வெளியைத் தொட முடியாது, அதனால் அவற்றுக்கு உங்கள் உடல் தேவை" (Robots need your body because they can't touch grass) என்பதே இவர்களின் முழக்கம். அதாவது, டிஜிட்டல் மூளையாகச் செயல்படும் AI-க்கு, நிஜ உலகில் நடமாடி வேலைகளைச் செய்ய மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்டதே இந்தச் சந்தை தளம். இங்கே AI ஏஜெண்டுகள் தங்களுக்கான உடல் உழைப்பைத் தரக்கூடிய மனிதர்களைத் தேடிக் கண்டறியும்.
35
Image Credit : PR
யார் இந்த தளத்தை உருவாக்கியது?
UMA Protocol-ன் கிரிப்டோ இன்ஜினியரான அலெக்சாண்டர் லைட்ஃப்லோ (Alexander Lightplo) என்பவரால் இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக மனிதர்கள்தான் AI-ஐப் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தத் தளத்தில் AI தான் முதலாளி, மனிதர்கள் பணியாளர்கள். இந்தத் தலைகீழ் மாற்றம் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 1.56 மில்லியனுக்கும் அதிகமானோர் இத்தளத்தைப் பார்வையிட்டுள்ளனர் என்பது இதன் வரவேற்புக்குச் சான்றாகும்.
45
Image Credit : Gemini
என்னென்ன வேலைகள் கிடைக்கும்?
இந்தத் தளத்தில் AI வழங்கும் வேலைகள் அனைத்தும் உடல் உழைப்பு சார்ந்தவை. உதாரணமாக, பார்சல்களை டெலிவரி செய்வது, மளிகைப் பொருட்களை வாங்கி வருவது, ஒருவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வது அல்லது செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது போன்ற பணிகளை மனிதர்கள் செய்யலாம். இதுமட்டுமின்றி, தனிமையில் இருப்பவர்களுடன் பேசுவது போன்ற துணை நிற்கும் சேவைகளையும் (Companionship) இதில் பட்டியலிடலாம்.
55
Image Credit : META AI
செயல்முறை மற்றும் வருமானம் எப்படி?
டெவலப்பர்கள் தங்கள் AI ஏஜெண்டுகளை 'மாடல் கான்டெக்ஸ்ட் புரோட்டோகால்' (MCP) மூலம் இந்தத் தளத்துடன் இணைக்க வேண்டும். மனிதர்கள் தங்கள் திறன்கள், பேசும் மொழி மற்றும் வேலை செய்ய விரும்பும் பகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு சுயவிவரத்தை உருவாக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு சுமார் $50 முதல் $69 வரை (தோராயமாக ரூ.4000 - ரூ.5500) வருமானம் நிர்ணயிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கட்டணம் எத்திரியம் (Ethereum) வாலட் மூலம் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
.png)
7 hours ago
17







English (US) ·