அதிக சிறுவர்களுக்குத் தலையில் காயம்: கே.கே. அவசரப் பிரிவு மருத்துவர்

4 hours ago 10

7468ff41-4327-49ff-a15b-803fffa63f1c

சிறுவர்களின் உடல் அமைப்பின்படி அவர்களின் தலையே பெரிதாக இருப்பதால் அது எளிதில் காயமடைவதாக கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசரப் பிரிவு மருத்துவர் டாக்டர் சுப்ராணி மதிப்ரெசகுல் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“சாலை விபத்துகளில் காயமடைந்த சிறுவர்களை அன்றாடம் நான் காண்கிறேன்,” என்று கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசரப் பிரிவு மருத்துவர் டாக்டர் சுப்ராணி மதிப்ரெசகுல் கவலை தெரிவித்தார்.

சிறுவர்களின் உடல் அமைப்பின்படி அவர்களின் தலையே பெரியதாக இருப்பதால் அது எளிதில் காயமடைவதாக அவர் மேலும் விவரித்தார்.

அவ்வாறு 2024ஆம் ஆண்டில் தலையில் பலத்த காயத்துடன் அவசரப் பிரிவுக்கு வந்த ஒரு சிறுவனின் ரத்தக் கசிவை முதலில் நிறுத்தி, மருத்துவ உதவியாளர்களின் துணையுடன் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததை நினைவுகூர்ந்தார்.

விபத்தில், தலைக் கவசம் அணியாமல் சைக்கிள் ஓட்டிய அந்த 12 வயது சிறுவனின் மண்டை ஓடு முறிந்து ரத்தக் கசிவு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் சாலைப் போக்குவரத்து விபத்துகளில் 149 பேர் மரணமடைந்தனர். பத்தாண்டுகளில் நடந்த விபத்துகளில் அதுவே ஆக அதிகமாகும். ஏனெனில், 2016ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 141 என்று இருந்தது.

காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 2025ல் 9,955 என்று ஏற்றம் அடைந்தது. அதே எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 142 மரணங்கள் உள்பட 9,342 என்று இருந்தது.

எனவே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக பல சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது.

சைக்கிளோட்டிகளுக்குத் தலைக்கவசத்தின் அவசியம்

தேசிய அபாய நிகழ்வுகளுக்கான பதிவகத்தில், சைக்கிள் ஓட்டுவோரில் 28.1 விழுக்காடு பெரியோரும் 9.9 விழுக்காடு சிறுவர்களும் விபத்துகளின்போது தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்று பதிசெய்யப்பட்டது.

தலைக்கவசம் அணிந்தோரில் 1.9 விழுக்காட்டினர் விபத்தின்போது மரணமடைந்தனர். ஒப்பிடுகையில் அவ்வாறு அணியாதோர் 5.3 விழுக்காடு மரணமடைந்தனர்.

Read Entire Article