Last Updated:Jul 23, 2026 5:47 PM IST
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: அமலாக்கத் துறை மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இதையும் படிங்க: “விஜயை மிஸ் செய்ய போகிறோம் என்பது வருத்தம்…” - ‘ஜனநாயகன்’ குறித்து த்ரிஷாவின் தாயார் பேட்டி!
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜராத்தினம், மதுரை சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத் துறையின் புகாரை இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிந்து வழக்கறிஞர்களின் இறுதி வாதம் துவங்க உள்ளது. இந்த நிலையில் வழக்கை மதுரை நீதிமன்றத்துக்கு மாற்றுவது தவறான அணுகுமுறை என வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த், மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுப்பது குறித்த நடைமுறை துவங்கியுள்ளது. ஆனால் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் அடுத்தடுத்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நடைமுறை தடுக்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு.. நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதம்!
.png)








English (US) ·