“இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என்றார் ஆதவ்…” - அன்று நடந்தது என்ன..? பாடகர் அறிவு விளக்கம்!

1 hour ago 8

Last Updated:Jul 23, 2026 8:13 PM IST

முதல்வரை சந்திப்பதால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். - பாடகர் அறிவு

பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில் அமீர், வெற்றிமாறன், ரேவதி, அறிவு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ராப் பாடகர் அறிவு பேசுகையில், “நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் இந்தியா முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  இது வெறும் நீட் தேர்வை ஒழிக்கும் போராட்டமா? அடிப்படை கல்வியே பிரச்சினையாக இருக்கிறது. நினைத்ததை படிக்கும் வாய்ப்பு இங்கு நமக்கு ஏற்படுத்தி தரப்படுகிறதா..?

நம் திறமையை வளர்த்தெடுக்கும் கல்வி அமைப்பு முறை இங்கு இல்லை. அதனால், மாணவருக்கு ஆசிரியரை பார்த்தும், தேர்வை பார்த்தும் பயம் வருவது இயல்பு. இந்த அரசாங்கம் போராடும் மாணவர்களை வன்முறை கட்டவிழ்த்து காயப்படுத்துகிறது. அனிதா 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. இந்த போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கும் வரை பின் வாங்க கூடாது.

இந்த போராட்டத்துக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. நான் அன்று தலைமை செயலகத்தில் போராடினேன். அதன் விளைவாக என்னை உள்ளே அழைத்து பேசினார்கள். ஆனால், நான் அன்று சந்தித்து முதல்வர் விஜயை அல்ல. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை தான் சந்தித்தேன். அவர் என்னிடம், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி வேண்டும்’ எனவே நீங்கள் ஏன் இந்த போராட்டத்தில் இறங்குனீங்க.. உங்களுக்கு இது தேவையில்லாத விஷயம் என அட்வைஸ் செய்து அனுப்பினார்.

முதல்வரை சந்திப்பதால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். இது மக்கள் கையிலெடுக்க வேண்டிய போராட்டம். மக்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். மக்களுக்கான எனது குரல் எப்போதும் ஓங்கும்” என தெரிவித்துள்ளார்.

“அடுத்து பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமாவை நாங்கள் கோருவோம்” – சிஜெபி அபிஜீத் திப்கே

  • அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜெபி வலியுறுத்தல்.

  • அடுத்து பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக கோருவோம்.

  • வரும் தேர்தலில் பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article