Last Updated:Jul 23, 2026 8:24 PM IST
யோகி பாபு நடிக்கும் ‘காகங்கள்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

யோகி பாபு நடிக்கும் ‘காகங்கள்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காகங்கள்’. இந்தப் படத்தை, ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை எழுதி இயக்கியுள்ளார். அவரே படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர்.

மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலி வடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் டிஐ (Digital Intermediate) உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
.png)







English (US) ·