Last Updated:May 12, 2026 6:54 AM IST
ADMK | 17வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஈபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவும், எஸ்பி வேலுமணி தலைமையின் கீழ் மற்றொரு பிரிவுமாக அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர்.

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஒரு தரப்பும், எஸ்பி வேலுமணியை ஆதரித்து மற்றொரு தரப்பும் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியதால் அதிமுக இரண்டாக உடைந்தது வெட்டவெளிச்சமானது. அதிமுக பிளவுபட்டதன் பின்னணியில் யார்?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சீனியர் நிர்வாகிகள் கடும் அதிருப்திக்குள்ளானதாக தகவல் பரவியது. இதன் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் ஓர் அணியும், ஈபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தின.
இதில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாடு கொண்டிருந்ததாகவும், ஈபிஎஸ் தரப்போ அதற்கு ஒரு படி மேல் சென்று திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவல்களை அதிமுக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இந்நிலையில், 17வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஈபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவும், எஸ்பி வேலுமணி தலைமையின் கீழ் மற்றொரு பிரிவுமாக அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர். அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓஎஸ் மணியன், மரகதம் குமரவேல், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கேசி கருப்பணன் உள்பட 23 எம்.எல்.ஏக்கள் கொண்ட தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தலைமையில் தலைமை செயலகம் வந்த 24 எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியும், கொறடாவாக சி விஜயபாஸ்கரையும் ஆதரித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதங்களை வழங்கினர். இதன் மூலம் அதிமுக உடைந்ததாக அரசல் புரசலாக பரவிய தகவல் உறுதியானது.
அதிமுகவில் பிளவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதேநேரம் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என மாநிலங்களவை எம்பி தனபால் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்றும் அவர் உறுதிபட கூறினார். அதேபோல், ஈபிஎஸ் முகத்திற்காகவே ஒன்றரை கோடி வாக்குகள் அதிமுகவுக்கு விழுந்ததாக தொண்டர்கள் தெரிவித்தனர்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் சிவி சண்முகம் முக்கிய பங்காற்றியதாக பேசப்பட்டது. தற்போது உருவாகி உள்ள எஸ்பி வேலுமணி தலைமை, ஈபிஎஸ் தலைமை என்ற பின்னணியிலும் சிவி சண்முகம் இருப்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது. எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஈபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக உருவாகுமா? என்ற கேள்விகளுக்கு விரைவில் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!
5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.
நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.
.png)





English (US) ·