இவ்வாண்டின் பிரதான விழா, மீடியாகார்ப் அரங்கில் சனிக்கிழமை (பிப்ரவரி 7) இரவு நடைபெற்று வருகிறது. - படம்: பிரதான விழா
Pradhana Vizha 2026 begins with a packed and enthusiastic audience.
The 2026 event was held at Mediacorp auditorium on February 7th, hosted by Udaya Soundari, Jaya Ganesh Eswaran, Karthikeyan Somasundaram, and Ravi G. Awards were presented in 19 categories, including program-based, artist-based, and popular awards. Navya Muthukrishnan won Best Emerging Artist for 'Karuvannam'. Nithya won Best Radio Creator for interviewing Krishna Mackenzie, while Halima won Best Audio Program for 'Singapenney'.
Generated by AI
அரங்கம் நிறைந்த உற்சாகத்துடன் பிரதான விழா 2026 களைகட்டியுள்ளது.
இவ்வாண்டின் நிகழ்ச்சி மீடியாகார்ப் அரங்கில் சனிக்கிழமை (பிப்ரவரி 7) இரவு நடைபெற்று வருகிறது.
உள்ளூர் நடிகர்கள் உதய சௌந்தரி, ஜெய கணேஷ் ஈஸ்வரன், கார்த்திகேயன் சோமசுந்தரம், ரவி ஜி ஆகிய நால்வரும் விழாவை தொகுத்து வழங்குகின்றனர்.
நிகழ்ச்சிகள் பிரிவில் ஆறு விருதுகள், கலைஞர்கள் பிரிவில் பத்து விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது, இரண்டு சிறந்த பிரபலமானோர் விருது என இவ்வாண்டு 19 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
முதல் விருதாக, சிறந்த வளரும் கலைஞர் பிரிவில், ‘கருவனம்’ நாடகத் தொடருக்காக நவ்யா முத்துகிருஷ்ணன், 23, விருது பெற்றார்.
இந்த விருது ஊக்கமளிப்பதாகவும் இப்பயணத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனும் உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறந்த வானொலிப் படைப்பாளர் விருதைப் பெற்றார் நித்யா.
‘ஆனந்தம் ஆரம்பம்’ எனும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ் பேசும் ஆங்கில விவசாயி கிருஷ்ணா மெக்கென்ஸியை நேர்காணல் செய்ததற்காக இவ்விருதை அவர் வென்றார்.
சிறந்த ஒலிவழி நிகழ்ச்சிப் பிரிவில் ‘சிங்கப்பெண்ணே’ நிகழ்ச்சிக்காக ஹலிமா விருதுபெற்றார்.
.png)





English (US) ·