தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வியடைந்த தற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், இந்திய அரசியலில் இன்னும் மீதமுள்ள சில உண்மையான அரசியல் முதிர்ச்சியுடைய தலைவர்களில் ஒருவராகவே நான் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து பார்க்கிறேன்.
இந்திய அரசியலில் தோல்வி என்பது பொதுவாக மறுப்பு, அகந்தை, மவுனம் அல்லது பழிவாங்கும் மனநிலையையே உருவாக்கு கிறது. பணிவு மிகவும் அரிது. அதனால்தான் தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலின் காட்டிய அணுகுமுறை இவ்வளவு வேறுபட்டதாகத் தோன்றியது.
கேரளாவில் இடதுசாரிகள் சந்தித்த அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, அங்குள்ள முதலமைச்சர் பின ராயி விஜயன், மனமுடைந்த கட்சித் தொண்டர்களை ஆறுதல் கூறுவதற்காக ஒரு சாதாரண இரண்டு வரி ஃபேஸ்புக் பதிவைக்கூட வெளியிடவில்லை. பல ஆண்டுகளாகக்கட்சிக்காக போராடிய ஆயிரக்க ணக்கான சி.பி.எம்.தொண்டர்கள், தேர்தல் முடிவுக்குப் பிறகு திசை தெரியாமல் நின்றனர். மவுனமே அரசியல் பதிலாக மாறியது.
மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட அரசியல் பின்னடைவுக்குப் பிறகு, மம்தா பொதுவாகவே “நான் பதவி விலக மாட்டேன்” என்று அறிவித்தார்.
இந்தியா முழுவதும் பல தலைவர்கள் தேர்தல் தோல்வியை தற்காலிக சிக்கலாகவோ அல்லது சதியாகவோ பார்க்கிறார்கள். சாதாரண தொண்டர்க ளின் உணர்ச்சி மேலீட்டை மிகச் சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
ஸ்டாலின் முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார்!
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அடுத்த நாளே, விஜய்யின் த.வெ.க. வேட்பாளரிடம் தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரையே இழந்தி ருந்தபோதும், அவர் மீண்டும் அந்தப் பகுதிக்குச் சென்றார். கோபமில்லை, நாடகமில்லை. குற்றச்சாட்டு அரசியலும் இல்லை. பல தசாப்தங்களாக தன்னுடன் இருந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் நேரடியாக மக்களிடம் சென்றார்.
அங்கிருந்த வீடியோக்களில், கட்சித் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுததை காண முடிந்தது. பலர் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டனர். சில ரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர்களுக்கே ஸ்டாலின் ஆறுதல் கூற முயன்றார்.
அந்தத் தருணம் அரசியல் ரீதியாக முக்கியமானது. ஏனெனில் அது இந்திய அரசியலில் நாளுக்கு நாள் மறைந்து வரும் ஒரு முக்கியமான பண்பை பிரதி பலித்தது.
ஜனநாயக கலாச்சாரம்!
இன்று நான் பார்த்த டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னை பதிப்பில், விஜய் அரசு அமைத்தால் அடுத்த ஆறு மாதங்கள் அவரைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் அரசியல் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்க விருப்பமில்லை என்றும், மக்களை மீண்டும் தேர்தலுக்குள் தள்ளக்கூடாது என்றும் அவர் கூறினார்.
புதிய அரசு நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி, த.வெ.க. தேர்தல் வாக்குறுதி களையும் நிறைவேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகே தி.மு.க. எதிர்க்கட்சியாக கட்டு மானமான விமர்சனத்தைத் தொடங்கும் என்றும் கூறினார்.
அது பலவீனம் அல்ல. அது அரசியல் முதிர்ச்சி!
தி.மு.க. தோல்வியை கேலி செய்த அ.தி.மு.க. தலைவர்களுக்கு, “தி.மு.க. எதிர்க்கட்சியாக அமரும்” என்ற எளிய பதிலையே ஸ்டாலின் அளித்தார். பதற்ற மில்லை, பரபரப்பில்லை,வெறும் தெளிவு மட்டும்.
தி.மு.க. ஒரு சாதாரண தேர்தல் இயந்திரம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது நவீன இந்தியாவின் மிக ஆழமான சித்தாந்த அடிப்படையுள்ள திராவிட இயக்கங்களில் ஒன்று. கட்சி தடைசெய்யப்பட்ட காலங்களையும், அவசரநிலை அடக்குமுறைகளையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும், உட்கட்சிப் பிளவுகளையும், மகத்தான தலைவர்களின் மறைவையும், பல தேர்தல் தோல்விகளையும் கடந்து உயிருடன் நின்றது.
எம்.ஜி.ஆரின் எழுச்சிக்குப் பிறகு பலர் தி.மு.க. முடிந்துவிட்டது என்றனர். ஜெயலலிதாவின் ஆதிக்க காலத்திலும் அதே கருத்து மீண்டும் எழுந்தது. ஆனால் அதன் சமூக அடித்தளங்கள் உறுதியாக இருந்ததால், கட்சி மீண்டும் மீண்டும் எழுந்து வந்தது.
ஸ்டாலின் நீண்ட காலம் கலைஞரின் நிழலில் இருந்தார். விமர்சகர்கள் அவரை பலவீனமான அரசி யல்வாதி என்றும், கவர்ச்சி இல்லாதவர் என்றும் கேலி செய்தனர். ஆனால் காலப்போக்கில் அவர் கட்சி அமைப்பை பொறுமையாக மீண்டும் கட்டியெ ழுப்பினார். நலத்திட்ட அரசியலை வலுப்படுத்தினார். நாடு முழுவதும் பெரும்பான்மை தேசியவாதம் தீவி ரமாக உயர்ந்துகொண்டிருந்த நேரத்தில், தி.மு.க. வின் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை மேலும் தெளிவு படுத்தினார்.
கூட்டாட்சி உரிமைகளை பாதுகாத்தார். பிரி வினைவாத அரசியலுக்குள் செல்லாமல் தமிழர் அடையாளத்தை தொடர்ந்து முன்வைத்தார். நீட் போராட்டங்கள், மொழி விவாதங்கள், ஆளுநர்-மாநில மோதல்கள் மற்றும் சமூக நீதி தொடர்பான கேள்விகளில், திராவிட சிந்தனைக்கு அவர் தெளிவான சித்தாந்த திசையை வழங்கினார்.
ஒரே ஒரு தேர்தல் தோல்வியால் அந்த அரசியல் அடித்தளம் மறைந்துவிடவில்லை!
இந்த முறை சரிந்தது தேர்தல் கணக்குப் போக்கே. பல்கட்சி ஜனநாயகத்தில், சித்தாந்தத்தை விட மக்கள் மனப்பதிவு பல நேரங்களில் வெற்றி பெறுகிறது. அமைப்பு வலிமையை விட பிரபலங்களின் கவர்ச்சி மேலோங்குகிறது. ஆட்சியில் இருப்போருக்கு எதிரான அதிருப்தி அமைதியாகச் சேர்ந்து கொண்டே இருக்கும். நலத்திட்ட சோர்வு உருவாகும். ஆளும் ஒவ்வொரு ஆதிக்கக் கட்சியும் ஒருநாள் இந்தச் சுழற்சியை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று.
தி.மு.க. தவறுகள் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. ஊழல் குற்றச்சாட்டுகள் அதன் நம்ப கத்தன்மையை பாதித்தன. இளைஞர்களின் ஒரு பகுதி புதிய அரசியல் கட்சிகளுக்கும், எதிர்-அமைப்பு அரசியலுக்கும் ஈர்க்கப்பட்டனர்.
ஆனால் பல பிராந்திய தலைவர்களைப் போல அல்லாமல், ஸ்டாலின் இன்னும் விமர்சனங்க ளுக்கு திறந்தவராகவே தோன்றினார். கண்மூடி கீழ்ப்படி தலைக் கோரும் வழிபாட்டு அரசியல் உருவமாக அவர் மாறவில்லை. அதனால்தான் அரசியல் எதிரி கள்கூட அவரது நாகரிகமான அணுகு முறையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அரசியல் என்பது தேர்தலில் வெல்வது மட்டுமல்ல. தோல்வியடைந்தபோது தலைவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும்கூட அரசியலே.
அந்த இடத்தில்தான் இன்று ஸ்டாலின் தனித்து வமாகத் தெரிகிறார்.
அவரை அரசியல் ரீதியாக யாராலும் புறக்கணிக்க முடியாது. தி.மு.கவை யாராலும் இலகுவாக அழித்துவிட முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறே ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. பரபரப்பை விட சித்தாந்தத்தின் முக்கியத்துவத்தை மக்கள் மீண்டும் உணரத் தொடங்கும்போது, திராவிட இயக்கங்கள் மீண்டும் எழும்.
ஸ்டாலின் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால் அவர் அரசியல் கண்ணியத்தை இழக்கவில்லை.
தோல்விக்குள்ளும் கண்ணியத்தை காப்பாற்றும் தலைவர்கள் தான், பெரும்பாலும் தங்கள் மீள்வரு கைக்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொள்கி றார்கள்.
கேரள மாநிலப் பத்திரிகையாளர் சாஜியின் ஆங்கில முகநூல், தமிழில்!
நன்றி: ‘முரசொலி’, 12.5.2026
.png)
13 hours ago
10





English (US) ·