Last Updated:Feb 08, 2026 10:08 PM IST
மு.க.ஸ்டாலின் சென்னையில் ஜாக்டோ ஜியோ நன்றி மாநாட்டில் அதிமுக ஆட்சியை விமர்சித்து, TAPS திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.
மத்திய அரசு திட்டமிட்டு நிதி நெருக்கடியை உருவாக்குவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் சார்பில் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர் அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது, போதிய நிதி தராத மத்திய அரசு குறித்தும் முதலமைச்சர் விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியின் போது பழைய ஓய்வூதிய திட்டம் பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், அனைவரையும் அரவணைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்றார். அதில், "பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வேர்வைத்துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி" என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக இதே நிகழ்வில், "TAPS திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு கருணை ஓய்வூதியம், 'உழைப்புக்கான உரிமைத் தொகை' என்ற பெயரில் வழங்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
First Published :
Feb 08, 2026 10:08 PM IST
.png)





English (US) ·