T20 World Cup 2026: அயர்லாந்து அணியின் பவுலிங் நன்றாக அமைந்தது. ஆனால் அவர்களின் பேட்டிங்கும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
2 Min read
Published : Feb 08 2026, 11:49 PM IST
12
![]()
Image Credit : Getty
டி20 உலகக்கோப்பை 2026
டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பின்னர் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
குசல் மெண்டிஸ், கமிந்து சூப்பர் பேட்டிங்
பதும் நிசங்கா (24), காமில் மிஷாரா (14), பவன் ரத்நாயக்க (5), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, குசல் மெண்டிஸ் - கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்த்த 67 ரன்கள் இலங்கைக்கு கைகொடுத்தது.
குசல் மெண்டிஸ் 43 பந்துகளில் 56 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து சார்பில் ஜார்ஜ் டாக்ரெல், பேரி மெக்கார்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
22
Image Credit : Getty
அயர்லாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட்
பின்னர் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்கத்திலேயே கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் (6) விக்கெட்டை அயர்லாந்து இழந்தது. தீக்ஷனாவின் பந்தில் அவர் போல்ட் ஆனார். பின்னர், ராஸ் அடேர் (34), ஹாரி டெக்டர் (40), லோர்கன் டக்கர் (21) ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடி அவுட் ஆனார்கள்.
ஹசரங்கா, தீக்ஷனா அசத்தல்
ஆனால் பெஞ்சமின் கால்டிஸ் (4), கரேத் டெலானி (0), கர்டிஸ் கேம்ஃபர் (13), மார்க் அடேர் (10), ஜார்ஜ் டாக்ரெல் (9), மேத்யூ ஹம்ப்ரிஸ் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வெற்றி பெற்ற முக்கிய காரணமாக விளங்கினார்கள்.
அயர்லாந்து அணியின் பவுலிங் நன்றாக அமைந்தது. ஆனால் அவர்களின் பேட்டிங்கும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
.png)
2 hours ago
18





English (US) ·