உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம் 52 டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த தங்க சுரங்கத்துக்கு தனி விமான நிலையமும் உள்ளது. வியக்க வைக்கும் இந்த சுரங்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
12

Image Credit : x
உலகின் பணக்கார தங்கச்சுரங்கம்
உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார தங்கச் சுரங்கமான (Gold Mine) இந்தேனேசியா நாட்டில் உள்ள கிராஸ்பெர்க் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் அமைந்துள்ள இந்த தங்கச்சுரங்கம் ஆண்டுதோறும் சுமார் 48 டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த சுரங்கம் தங்கத்துடன் சேர்ந்து, இது உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
22
Image Credit : GOOGLE
தனி விமான நிலையம்
கிராஸ்பெர்க் சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தாதுவில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் இரண்டும் உள்ளன. புன்காக் ஜெயா அருகே அமைந்துள்ள கிராஸ்பெர்க் தங்கச் சுரங்கம் பப்புவாவின் மிக உயரமான மலையாகும். இந்த முழுப் பகுதியும் டெக்டோனிக் தகடுகளின் மாற்றத்தால் உருவாக்கப்பட்டதும் கனிம வைப்புகளால் நிறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிராஸ்பெர்க் தங்கச் சுரங்கத்திலிருந்து கணிசமான அளவு தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமான சுரங்கத்தில் சுமார் 20,000 பேர் பணிபுரிகின்றனர்.
இந்த தங்கச் சுரங்கத்துக்கு என்று தனியாக விமான நிலையம் அமைந்துள்ளது. ஒரு துறைமுகம் கூட உள்ளது. மேலும் குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான மருத்துவமனைகளும் உள்ளன.
52 டன் தங்கம் உற்பத்தி
கிராஸ்பெர்க் தங்கசுரங்க வரலாற்றை புரட்டி பார்த்தால் 1936ம் ஆண்டு டச்சு புவியியலாளர் ஜீன் ஜாக்ஸ் டோசி என்பவரால் இங்குள்ள கனிம வளங்கள் முதன்முதலில் கண்டறியப்பட்டன. 1960ம் ஆண்டுகளில் ஃப்ரீபோர்ட்-மெக்மோரான் என்ற நிறுவனம் இங்கு தங்கம் எடுக்க உரிமம் பெற்ற பிறகு இந்த சுரங்கம் விரிவடைந்து வருகிறது. 2023ம் ஆண்டில் மட்டும் இந்த தங்கச் சுரங்கம் 52.9 டன் (1.7 மில்லியன் அவுன்ஸ்) தங்கம், 680,000 டன் தாமிரம் மற்றும் 190 டன் வெள்ளியை உற்பத்தி செய்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
1 hour ago
20





English (US) ·