துக்கம் மட்டுமல்ல, எல்லை இல்லாத அதிகப்படியான மகிழ்ச்சியும் அரிதான வேளையில் ‘ஹேப்பி & சிண்ட்ரோம்’ எனும் இதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் கடுமையான நெஞ்சு வலியும் மூச்சுத்திணறலும் ஏற்படும்.
ஆனந்த கண்ணீர் வடிப்பது பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அளவுக்கு அதிகமான சந்தோஷம் ஒருவரின் இதயத்தையே தற்காலிகமாக பலவீனப்படுத்தக்கூடும் என்று உங்களுக்கு தெரியுமா? ‘உடைந்த இதய நோய்’ பற்றி கேள்விப்பட்ட நமக்கு, ‘மகிழ்ச்சியான இதய நோய்’ என்ற ஒன்றை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக்ஸ்ஃபோர்டு மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியான மருத்துவ சம்பவம் இது. 65 வயது பெண்மணி தனது மகளின் திருமணத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடி முடித்தார். ஆனால், அடுத்த 3 நாட்களுக்கு அவருக்குக் கடுமையான நெஞ்சு வலியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மாரடைப்பு ஆக இருக்குமோ என்ற பயத்தில், மருத்துவர்கள் அவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பரிசோதனையில் மருத்துவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவரது குருதி நாளங்களில் எந்த அடைப்பும் இல்லை.
ஆனால், அவரது இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் பகுதி தற்காலிகமாக வீங்கி, விசித்திரமான வடிவத்திற்கு மாறியிருந்தது. இதனால், இதயத்தால் குருதியைச் சீராகப் பம்ப் செய்ய முடியாமல் போயிருந்தது. அந்த பெண்மணிக்கு டகோட்சுபோ காரடியோமைரோபதி என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையே மருத்துவர்கள் ‘ஹேப்பி ஹார்ட் சிண்ட்ரோம்’ என்று அழைக்கிறார். இது பார்க்க அப்படியே மாரடைப்பு போல தான் இருக்கும். ஆனால், குருதி நாள அடைப்பால் வராமல், தீவிர உணர்ச்சிகளால் மட்டுமே ஏற்படும்.
மாரடைப்பு அறிகுறிகளுடன் வரும் மருத்துவப் பயனாளிகளில் வெறும் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த டி.டி.எஸ் பாதிப்பு இருக்கிறது. இந்த தாக்குதல் வந்தவர்களில் வெறும் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே திருமணம், குடும்ப மறுசந்திப்பு, பெரிய வெற்றிகள் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் காரணியாக அமைகின்றன. மீதமுள்ள பெரும்பாலான வழக்குகள் துக்கம் அல்லது அதிர்ச்சியால் ஏற்படுபவை. இந்த கண்டிஷன் பொதுவாக தற்காலிகமானது மற்றும் முழுமையாகக் குணமாகக்கூடியது தான். இருப்பினும், இதை அலட்சியப்படுத்தக் கூடாது.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இது உயிருக்கே ஆபத்தாக முடியும். மகிழ்ச்சியான நிகழ்வுகளால் வரும்போது இதற்கான அறிகுறிகள் மிக மிதமாக இருப்பதால், மக்கள் இதை எளிதில் கவனிக்காமல் விட்டுவிடும் அபாயம் உள்ளது. துக்கமோ அல்லது எல்லையற்ற மகிழ்ச்சியோ, இரண்டுமே உடலில் ஒரே மாதிரியான இரசாயன மாற்றங்களைத்தான் ஏற்படுத்துகின்றன. 2 நிலைகளிலுமே நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, ‘ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள்’ திடீரென பெருக்கெடுத்து ஓடுகின்றன. இருப்பினும், மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் போது உடலின் ‘நியூரோஹார்மோனல்’ எதிர்வினைகள் சற்று மாறுபடலாம். மகிழ்ச்சியால் வரும் இதய பாதிப்பு குறைவான அறிகுறிகளையுமே வெளிப்படுத்துகிறது, சீக்கிரமே குணமடையவும் செய்கிறது என்கிறார்கள் இந்த ஆய்வைச் செய்த மருத்துவர்கள்.
.png)
1 hour ago
6







English (US) ·