ஆர்டிஎஸ் ரயில் சேவை மூலம், சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள சில்லறை வணிகர்கள் கடுமையான வணிகப் போட்டியைச் சந்திக்க நேரிடும் என்று கருதப்படுகிறது. - படம்: ஷின்மின்
சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பாரு இடையிலான ஆர்டிஎஸ் ரயில் சேவை, வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த வேகமான ரயில் சேவை மூலம் சிங்கப்பூர் மக்கள் குறைந்த நேரத்தில் எல்லை தாண்டிச் சென்று பொருள்கள் வாங்கவும், உணவருந்தவும், சேவைகளைப் பெறவும் முடியும்.
இதனால், சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள சில்லறை வணிகர்கள் கடுமையான வணிகப் போட்டியைச் சந்திக்க நேரிடும்.
சிங்கப்பூரில் அதிக வாடகை மற்றும் பணியாளர்களின் ஊதியச் செலவு காரணமாக, உள்ளூர்க் கடைகளால் விலையைக் குறைத்து மலேசியக் கடைகளுடன் போட்டியிட முடியாது. எனவே, சிங்கப்பூர் வணிகர்கள் புதுமையான உத்திகளைக் கையாள வேண்டும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெறும் விலையை மட்டும் நம்பியிருக்காமல், வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தனித்துவமான பொருள்கள், உயர்தர உணவு வகைகள் மற்றும் சிறப்பான சுகாதாரச் சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும்.
மேலும், ஜோகூர் பாரு வணிகர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படலாம். அங்கு நடைமுறைச் செலவு குறைவு என்பதால் புதிய வணிக உத்திகளைச் சோதித்துப் பார்க்கவும், புதிய கிளைகளைத் திறக்கவும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.
தொடக்கக் கட்டத்தில் உள்ளூர் வணிகர்களுக்குச் சவால்கள் மற்றும் வர்த்தக இழப்பு இருந்தாலும், நீண்டகாலத்தில் இரு வட்டாரங்களுக்கும் இடையிலான சந்தை நிலைமை சீராகிச் சமநிலையை எட்டும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.png)








English (US) ·