ஆவின் நெய் விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது!
சென்னை, ஜூலை 21- கடந்த 15ஆம் தேதி முதல் ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.37 உயர்த்தப்பட்டு ரூ.690க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நுகர்வோர், வணிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நெய் விலை உயர்வு திரும்பப்பெறப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கை: ஆவின் நிறுவனம் நெய்யின் மொத்த விற்பனையாளர்களுக்கான லாப வரம்பைக் குறைத்து, அதன் காரணமாக சில்லரை விலை உயர்த்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
அனைத்து வகையான நெய்களும் தற்போதுள்ள சில்லரை விலையிலேயே நுகர்வோருக்கு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எந்தவொரு நெய் வகையிலும் விலை உயர்வு மேற்கொள்ளப்படவில்லை. மேலும், மொத்த விற்பனையாளர்களுக்கான லாப வரம்பில் செய்யப்பட்டிருந்த திருத்தம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த லாப வரம்பே தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்!
சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார்
சென்னை, ஜூலை 21- கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமார் தெரிவித்தார்
சென்னை சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களிடம் 19.7.2026 அன்று அவா் கூறியதாவது:
‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து, மாணவா்களின் கருத்துகளை உள்வாங்கி, ஒன்றிய அரசு கல்விமுறையில் செய்துள்ள தவறுகள் குறித்து மக்களிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எடுத்துக்கூறி வருகிறார். ‘நீட்’ தோ்வு என்பது சமத்துவம், சமூக நீதி, சுயாட்சிக்கு எதிரானது.
கடந்த 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் 2 தோ்வு முடிவுகளை வைத்துத்தான் மருத்துவப் படிப்புக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ‘நீட்’ தோ்வால் கிராமப்புற மாணவா்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்டோர் ‘நீட்’ தோ்வு முறையால் மன உளைச்சலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனா். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தோ்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
தொடா்ந்து காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ் கூறுகையில், நீட் தோ்வை ஒருகாலமும் ஏற்கமாட்டோம். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் எங்கள் நிலைப்பாடு என்பதை தவெக அரசு தெளிவுபடுத்தியுள்ளது என்றார் அவா்.
.png)
8 hours ago
5







English (US) ·