ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

57 minutes ago 9

720468af-d821-4282-bc07-0c524948e461

சுறா தாக்கியதில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். - படம்: பிக்சல்ஸ்

One person killed in a shark attack in Australia.

A man in his 30s died in Western Australia after a shark attack near Rottnest Island, close to Perth, around 10:00 AM. Police reported the incident, stating the injured person could not be revived. The Department of Primary Industries and Regional Development confirmed he was attacked by a four-metre-long shark and urged increased caution in the area. This incident adds to Australia's history of shark attacks, with over 260 deaths since 1791.

Generated by AI

சிட்னி: மேற்கு ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார்.

பெர்த்துக்கு அருகே ரோட்நெஸ்ட் தீவுக்கு அருகே காலை 10.00 மணியளவில் சுறா தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த நபரை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர் கூறினர்.

நான்கு மீட்டர் நீளமுள்ள சுறாவால் அவர் தாக்கப்பட்டார் என்று அம்மாநிலத்தின் முதன்மை தொழில் மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை ஏஎஃப்பியிடம் கூறியது.

அப்பகுதியில் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி அது கேட்டுக் கொண்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறா தாக்கியதில் உயிரிழந்தார்.

1791 முதல் ஆஸ்திரேலியா முழுவதும் ஏறக்குறைய 1,300 சுறா தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 260க்கு மேற்பட்டவை உயிரிழப்பில் முடிந்துள்ளன.

Read Entire Article