குறியீடுகள் மூலம் இஆர்பி கட்டணங்கள் வசூலிக்கப்படும். அவை கண்களுக்குத் தெரியும் வகையில் இருக்கும். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்
அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (இஆர்பி2) விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில் அது தொடர்பான சாலை அடையாளங்கள், குறியீடுகள் புதிதாக ஐந்து இடங்களில் சோதனை செய்யப்படவுள்ளது.
ஜூன், ஜூலை மாதங்களில் அந்தச் சோதனை இடம்பெறும்.
குறியீடுகள் மூலம் இஆர்பி கட்டணங்கள் வசூலிக்கப்படும். அவை கண்களுக்குத் தெரியும் வகையில் இருக்கும். தற்போதுள்ள இஆர்பிகள் சாலைகளில் பெரிய அளவில் நிறுத்தப்பட்ட பலகைகளில் உள்ளன.
2027ஆம் ஆண்டு முதல் புதிய இஆர்பி கட்டணமுறை நடைமுறைக்கு வருகிறது.
குறியீடுகளைச் சோதனை செய்வதுமூலம் ஓட்டுநர்களிடம் இருந்து கருத்துகள் சேகரிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இதற்கு முன்னர் பேஷோர் டிரைவில் மார்ச் மாதம் இஆர்பி குறியீடுகள் வைக்கப்பட்டன. அதில் திரட்டப்பட்ட கருத்துகளை வைத்து இஆர்பி நடைமுறை மெருகேற்றப்பட்டுள்ளது.
புதிதாகச் சோதிக்கப்படும் ஐந்து இடங்களும் ஐந்து விரைவுச் சாலைகளில் உள்ளன.
* மேற்கு நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலை (PIE), காலாங் பாருவுக்குப் பிறகு வரும் வுட்ஸ்வில் மேம்பாலம்.
* மேற்கு நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலை (PIE), யூனோஸ் லிங்கிற்கு முன்பு.
*தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலை (CTE) சிராங்கூன் ரோடு முதல்.
*மரீனா பொலிவார்ட்டில் இருந்து மரீனா கோஸ்டல் விரைவுச்சாலை செல்வது. கிழக்கு நோக்கிச் செல்லும் பாதை.
*ஆயர்ராஜா விரைவுச்சாலை. ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பிறகு நகரை நோக்கிச் செல்லும் பாதை.
.png)






English (US) ·