இந்தோனீசிய சாலை விபத்தில் ஆறு சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர்

1 hour ago 11

452a44ac-93e9-45b1-987b-8fdce33c82b4

கீழ்நோக்கிச் சென்ற சாலையில் தடம்புரண்ட மினிவேன், இறுதியாக ஒரு விளக்குக் கம்பத்தை மோதி நின்றது. - படம்: RADIOELSHINTA/X

Six Singaporeans were injured in an Indonesian road accident.

A minivan transporting eight tourists, including six Singaporeans, crashed on May 9 in Ngadas village, East Java, after visiting Bromo volcano. The vehicle veered off a downhill road, colliding with a lamp post and three other vehicles, due to brake malfunction. Passengers sustained abrasions and were hospitalized with assistance from local villagers. Police are investigating, and consular assistance has been extended to the affected Singaporean nationals.

Generated by AI

கிழக்கு ஜாவா: இந்தோனீசியாவின் புகழ்பெற்ற ‘புரோமோ’ எரிமலையைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மினிவேன் வாகனம், கீழ்நோக்கிச் சென்ற சாலையில் தடம்புரண்டு ஒரு விளக்குக் கம்பத்தை மோதி நின்றது.

சம்பவம் சனிக்கிழமை (மே 9) காலை 11.45 மணியளவில் கிழக்கு ஜாவாவில் உள்ள புரோபோலிங்கோ என்ற பகுதியில் இருக்கும் ஙாடாஸ் என்ற கிராமத்தில் நடந்ததாக உள்ளூர் காவல்துறை குறிப்பிட்டது.

அந்த வாகனத்தில் இருந்த எட்டு நபர்களில் அறுவர் சிங்கப்பூரர்கள். சுற்றுலாப் பயணிகளோடு குறுகலான பாதையில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது அது கட்டுப்பாட்டை இழந்தது.

வாகனத்தின் ‘பிரேக்’ எனப்படும் வேகத் தடுப்புச் சாதனம் சரிவர இயங்காததால் விபத்து நிகழ்ந்தது என்று விசாரணையில் தெரியவந்தது.

விபத்தில் மேலும் மூன்று வாகனங்களை அந்த மினிவேன் மோதிச் சென்றதாக இந்தோனீசிய ஊடகம் தெரிவித்தது.

வாகனத்தில் இருந்த பயணிகளுக்கு முகங்கள் உள்பட உடலில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவர்களை அந்த கிராம மக்கள் வாகனத்தில் இருந்து வெளியேற்றி, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து உள்ளூர் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு விசாரணை நடத்துகிறது.

பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு துணைத் தூதரக உதவி வழங்கப்படுகிறது.

மிகவும் அழகான இயற்கை வளங்கள் சூழ்ந்த அந்த எரிமலையைக் காணப் பல சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்வது வழக்கம்.

Read Entire Article