பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாள் இன்று (9.2.1951)
இந்தியா 1947-இல் சுதந்திரம் அடைந்து, 1950-இல் குடியரசு நாடாக மாறிய பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1872 முதல் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டாலும், இதுவே குடியரசு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி மார்ச் 1, 1951 வரை நீடித்தது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவில் இந்தியாவின் மக்கள் தொகை 36,10,88,090 (சுமார் 36 கோடி) எனப் பதிவானது.அப்போதைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக ஆர்.ஏ. கோபாலசாமி பணியாற்றினார்.1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மக்கள் தொகையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அகதிகளின் வருகையைத் துல்லியமாகப் பதிவு செய்ய இது உதவியது. நாட்டின் முதல் அய்ந்தாண்டுத் திட்டத்தைத் தீட்டுவதற்கும், சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கவும் இத்தரவுகள் அடித்தளமாக அமைந்தன.பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவின் தொடக்க காலத்தில் எழுத்தறிவு விகிதம் மிகவும் குறைவாக (சுமார் 18%) இருந்ததை இந்தக் கணக்கெடுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
1951 கணக்கெடுப்பு என்பது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இந்தியாவின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது (அங்கு 1961-இல்தான் முதல் கணக்கெடுப்பு நடந்தது.
.png)
21 hours ago
16






English (US) ·