கடந்த 2014ஆம் ஆண்டு இன்ஸ்டகிராமில் இணைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - சித்திரிப்புப் படம்: நியூஸ் 18
Instagram: Modi, the most followed political figure.
Indian Prime Minister Narendra Modi has set a new world record, becoming the most-followed political leader on Instagram with approximately 100 million followers. Modi, active on the platform since 2014, surpasses other global leaders. Former US President Donald Trump ranks second with 43.2 million followers, followed by Indonesian President Prabowo Subianto (15 million), Brazilian President Lula da Silva (14.4 million), and Turkish President Erdogan (11.6 million).
Generated by AI
புதுடெல்லி: இன்ஸ்டகிராம் தளத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஏறக்குறைய நூறு மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
இது புதிய உலக சாதனையாகும். உலகில் வேறு எந்த அரசியல் தலைவரையும் இத்தனை பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடரவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு இன்ஸ்டகிராமில் இணைந்த பிரதமர் மோடி, தொடர்ந்து அத்தளத்தில் இயங்கி வருகிறார். மற்ற உலகத் தலைவர்களும் அத்தளத்தில் இயங்கி வந்தாலும், அவர்களில் எவரையும் திரு மோடியைப் போன்று அதிகமானோர் பின்தொடரவில்லை.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை 43.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் இப்பட்டியலில் அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்தோனீசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோவை 15 மில்லியன் பேர் பின்தொடர்வதையடுத்து, அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
பிரேசில் அதிபர் லூலா டா சில்வா (14.4 மில்லியன்) நான்காம் இடத்தில் உள்ளார்.
துருக்கி அதிபர் எர்துவான் (11.6 மில்லியன்), அர்ஜென்டினா அதிபர் ஹாவியர் மிலேய் (6.4 மில்லியன்) ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் இருக்கின்றனர்.
.png)







English (US) ·