இபிஎஸ்ஸுக்கு 13... சி.வி.சண்முகத்துக்கு 37... அதிமுகவில் நடப்பது என்ன? - இரண்டாகப் பிரிகிறதா? அதிரும் அரசியல் களம்!

1 hour ago 9

Last Updated:May 11, 2026 7:12 AM IST

அதிமுகவில் சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்துவதால் அக்கட்சி மீண்டும் பிளவை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவிற்கு என்ன நடக்கிறது?.

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகி, அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்து, 47 இடங்களை மட்டுமே வென்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்த நிலையில், இந்த தோல்வி அதிமுகவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது, சி.வி.சண்முகம் தனியாக ஆலோசனை நடத்தியது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

 குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம் இடையே அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இபிஎஸ் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும், கூட்டணி முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிலும் தனியாக மற்றொரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

 இந்த பரபரப்பு 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவில் எஸ்.பி.வேலுமணி, நன்னிலம் காமராஜ், ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி, பாலக்கோடு கே.பி.அன்பழகன், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், லீமா ரோஸ் மார்ட்டின், அமமுக எம்.எல்.ஏ. மன்னார்குடி காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 இது தவிர ஒரு சிலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விட்டும் சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு சென்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆர்.பி.உதயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வேளச்சேரி அசோக், கே.பி.கந்தன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 16 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இ.பி.எஸ். தலைமையிலான கூட்டத்தில், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், கே.சி.கருப்பண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிகிறது.

 மேலும், இபிஎஸ் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றதாகத் கூறப்படுகிறது. அதிமுகவில் மொத்தம் 82 மாவட்ட செயலாளர்களும், 47 எம்.எல்.ஏக்களும் உள்ள நிலையில், இப்போது யார் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்துள்ளார்.

 இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே கட்சியை வழிநடத்த தகுதியானவர் என முன்னாள் எம்.எல்.ஏ மணிமேகலை பேட்டி அளித்துள்ளார். மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்ற சில கருத்துக்களுக்குப் பதிலளித்த அவர், தனது தொகுதியில் 98,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு தலைவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்தார். கட்சி பின்னடைவைச் சந்தித்திருந்தால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டும் இரட்டை இலை சின்னம் அபரிமிதமான வளர்ச்சி அடையச் செய்வதற்கான தீர்வுகளை அவர் நிச்சயம் காண்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

 மேலும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்தோ அல்லது கட்சியின் அடுத்தகட்ட மாற்றங்கள் குறித்தோ பொதுச்செயலாளர் எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் தொண்டர்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள் என்று மணிமேகலை தெரிவித்தார். புதிய அரசு பொறுப்பேற்றுவிட்டாலும், அதிமுகவின் இருவிதமான ஆலோசனைக் கூட்டங்களும் எதை நோக்கி நகர்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Weather Update | தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம்? வானிலை மையம் அப்டேட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம்!

  • மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல சுழற்சி.

  • ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை.

  • 15, 16 தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article