ஈரோட்டில் 207 அடியில் ஆக உயரமான முருகன் சிலை

1 hour ago 18

d89f105c-34c1-4283-bf8d-4ec1dbaf2bad

திண்டல் மலையில் அமைந்துள்ள முருகன் கோவில். - படம்: மைடெம்பிள்டிரிப்ஸ்.இன்

ஈரோடு: தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், திண்டல் மலையில் உலகின் ஆகப்பெரிய முருகன் சிலை நிறுவப்பட உள்ளது.

தமிழக இந்த சமய அறநிலையத்துறை இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மலேசியாவின் பத்துமலையில் உள்ள முருகன் சிலை 140 அடி உயரம் கொண்டது. அதனை விஞ்சும் வகையில், சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் அண்மையில் 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மற்றொரு சாதனை முயற்சியாக, திண்டல் மலையில் உலகின் ஆகப்பெரிய முருகன் சிலையை அமைப்பதற்கான பணிகள் அதிகாரத்துவமாகத் தொடங்கியுள்ளன.

அந்தச் சிலையானது 207 அடி உயரம் இருக்கும் என்றும் சிலை உருவான பின்னர் ஆன்மிகச் சுற்றுலாத்துறையில் ஈரோடு மாவட்டம் புகழ்பெற்ற தலமாக மாறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில் சிலை அமைக்கும் பணி முடிவடைந்ததும் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அங்கு அடிப்படை வசதிகளும் பூங்கா அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை கூறியுள்ளது.

சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தனர்.

Read Entire Article