Last Updated:Jul 22, 2026 2:56 PM IST
தேசிய விருது பெற்ற சாச்சனா, விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்தார். மகாராஜா படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அவருக்கு கிடைத்தது.

2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில், மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது சாச்சனா நமிதாஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற சாச்சனா நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், "தேசிய விருது அறிவிக்கும் நிகழ்வை இயக்குநர் பார்க்க சொன்னதை அடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென அதில் எனது பெயரை பார்த்ததும் நான் அழுதுவிட்டேன். எனது பெயர் வந்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. தேம்பி தேம்பி அழுதேன். அவ்வளவு சந்தோஷம்.
எனக்கு தேசிய விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம். சொல்வதற்கு வார்த்தையே இல்லை. இந்த வெற்றிக்கு காரணம் முதலில் இயக்குனர், பின்னர் அப்பாவாக இருந்த நடிகர் விஜய் சேதுபதி. எனக்கு விஜய் சேதுபதி சார் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார். நான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி உண்மையான அப்பா போன்று எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
எனது அப்பா, அம்மா, என் உடன் பிறந்த சகோதரிகள் இவர்களின் ஆதரவோடு தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இது எனது திறமைக்கு கிடைத்த விருது என்பதை விட அதிர்ஷ்டம் தான் காரணம். விஜய் சேதுபதி சார் முதல் முறையாக பார்த்தபோது கை கால் நடுங்கியது. தற்பொழுது அவரை நேரில் பார்த்தால் கட்டி பிடித்து அழுவேன். 'உங்களால் தான் எனக்கு கிடைத்தது' என்று சந்தோஷத்தில் சொல்வேன். இந்த விருதை எனது உடன் பிறந்த சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
.png)








English (US) ·