Last Updated:Feb 26, 2026 8:09 PM IST
VIROSH | திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண ஆல்பம் வெளியாகியுள்ளது.

திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் இன்று உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தங்களது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, "ஒரு நாள், அவளுடைய நினைவு என்னை வாட்டியது. அவள் என் அருகில் இருந்திருந்தால், அந்த நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும் அளவிற்கு ஒரு ஏக்கம். அவள் எனக்கு எதிரே அமர்ந்து சாப்பிட்டிருந்தால், அந்த உணவு இன்னும் நிறைவாக இருந்திருக்கும் என்று தோன்றியது." என்று கூறியுள்ளார்.
மேலும், "அவள் என்னுடன் இருந்திருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல், இன்னும் உற்சாகமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. நான் எங்கே இருந்தாலும், ஒரு அமைதியையும் வீட்டில் இருக்கும் உணர்வையும் பெறுவதற்கு அவள் எனக்குத் தேவைப்பட்டாள். அதனால்... என் உயிர்த் தோழியை, என் மனைவியாக்கிக் கொண்டேன்." என்று விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வரவேற்பைப் பெற்று வருகிறது.
"விரோஷ்" என்று அன்போடு அழைக்கப்படும் இந்த ஜோடி, தங்களது திருமணத்தை வெறும் ஆடம்பர நிகழ்வாக மட்டும் பார்க்காமல், தங்களது கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத நிகழ்வாக மாற்றியுள்ளனர்.
இதற்காக அவர்கள் இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்களின்படி திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தனர். திருமணத்தின் முதல் பகுதி இன்று காலையில் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
மங்கல இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, தெலுங்கு பழக்கவழக்கங்களின்படி மங்கலசூத்திரம் கட்டுதல் மற்றும் சுமங்கலியம் போன்ற சடங்குகள் பக்திப்பூர்வமாக நடந்தேறின. எளிமையும் ஆன்மீகமும் நிறைந்த இந்த காலை நேர நிகழ்வில் இரு குடும்பத்தினரும் புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்தனர்.
தங்களது முன்னோர்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்றிய இந்த நிகழ்வு, திருமணத்திற்கு ஒரு புனிதமான தொடக்கத்தை அளித்தது. அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு ராஷ்மிகாவின் பூர்வீகமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் 'கொடவா' (Kodava) பாரம்பரிய திருமணம் மீண்டும் நடைபெற்றது.
மற்ற திருமணங்களைப் போல அக்னி வளர்ப்பதோ அல்லது பூசாரிகள் மந்திரம் ஓதுவதோ இல்லாத இந்தத் திருமணம், முற்றிலும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் ராஷ்மிகா, பின்புறம் மடிப்புகள் கொண்ட குடகு பாணி புடவையை அணிந்து பாரம்பரிய மணப்பெண்ணாக ஜொலித்தார். கொடவா சமூகத்தின் வீர வரலாற்றைப் பறைசாற்றும் வகையில், வாளால் தேங்காய் வெட்டுவது போன்ற தனித்துவமான சடங்குகள் இந்த மாலை நேர விழாவிற்கு கூடுதல் மெருகூட்டின.
செயற்கையான அலங்காரங்களைத் தவிர்த்து, உள்ளூர் மலர்கள் மற்றும் இயற்கை சார்ந்த கிராமிய எளிமையுடன் திருமண மேடை அமைக்கப்பட்டிருந்தது. விருந்தினர்களுக்கு ஆந்திராவின் காரசாரமான பிரியாணி வகைகளும், குடகின் தனிச்சிறப்பு உணவுகளும், இனிப்பு வகையாக மைசூர் பாகும் பரிமாறப்பட்டன.

பழங்கள் மீது எலி மருந்தை தடவிய பயங்கரம்... உயிருடன் விளையாடிய வியாபாரி
மும்பையில் பழ வியாபாரிகள் பழங்கள் மீது எலி மருந்தை தடவியதால் மக்கள் அதிர்ச்சி
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 2 வியாபாரிகளை கைது செய்தனர்
சாலையோரங்களில் பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
.png)








English (US) ·