Last Updated:Feb 22, 2026 1:59 PM IST
விஜய் மட்டுமல்லாமல், வரும் சட்டபேரவை தேர்தலில் மற்றொரு நடிகரும் போட்டியிட இருக்கிறார். அவர் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டியால் சட்டப்பேரவை தேர்தல் களைகட்டியிருக்கிறது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, காரைக்குடியில் சீமான் போட்டியிடுகிறார். சேலம் மாவட்டம் மேட்டூரில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் களம் காண்கிறார். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் நடிகர் திருமுருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். இந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை பெற்றார்.
தொடர்ந்து ‘முதல் இடம்’, ‘அரவான்’, ‘என்னமோ நடக்குது’, ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘49 ஓ’, ‘ஈட்டி’, ‘பென்சில்’, ‘கட்டப்பாவ காணோம்’ ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘டீசல்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் திருமுருகன்.
திரைப்படங்களை தவிர்த்து, ‘சுழல்’ வெப்சீரிஸிலும் நடித்துள்ளார் திருமுருகன். தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திருமுருகன், நாம் தமிழர் கட்சியில் நீண்டகாலமாக இருந்து வருகிறார். தஞ்சை மாவட்டம் ஒருத்தநாடு அருகே உள்ள அம்பலாபட்டு தான் திருமுருகனின் சொந்த ஊர். தான் பிறந்த ஊரிலேயே நாம் தமிழர் சார்பில் அவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என கூறுவது அநீதியின் உச்சம் - தமிழிசை
மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறுவது அநீதியின் உச்சக்கட்டம் - தமிழிசை
தேமுதிக-திமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி, இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படும்
எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
.png)





English (US) ·